உத்தவ் அறிவிப்பு: 24 புதிய நகர்ப்புற குடியிருப்புகள்

மும்பை: மும்பை, நாக்­பூர் இடையே அமைக்­கப்­பட்­டுள்ள விரைவு சாலை­யோ­ரத்தில் புதி­தாக 24 நகர்ப்­புற குடி­யி­ருப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் என மகா­ராஷ்­டிரா முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் மும்­பை­யில் நடை­பெற்ற சுதந்­திர தின விழா­வில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநி­லம் முழு­வ­தும் சுமார் 2.95 மில்­லி­யன் விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கடன் தள்­ளு­படி செய்யப்­படு­வ­தாக அறி­வித்­தார்.

கொரோனா கிரு­மித் தொற்று கார­ண­மாக தற்­போது பள்­ளி­களைத் திறக்க முடி­ய­வில்லை என்­றா­லும், கூகுள் நிறு­வ­னத்­து­டன் இணைந்து இணை­யம் வழி கல்­விச் சேவை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், நாட்­டி­லேயே மகா­ராஷ்­டிரா அரசு மட்­டுமே இத்­த­கைய நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

மேலும், ஊர­டங்கு தளர்வு கார­ண­மாக தற்­போது மாநி­லம் முழு­வ­தும் சுமார் 66 ஆயி­ரம் தொழிற்­சா­லை­கள் செயல்­ப­டத் தொடங்­கி­யி­ருப்­ப­தா­க­வும் 14 லட்சத்­துக்­கும் அதி­க­மான தொழி­லா­ளர்­கள் பணிக்­குத் திரும்­பி­யிருப்­ப­தா­க­வும் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­தார்.

“மும்பை, நாக்­பூர் ஆகிய இரு நக­ரங்­க­ளுக்கு இடையே விரை­வுச்­சாலை அமைக்­கும் பணி வேகமாக நடை­பெற்று வரு­கிறது. மிக விரை­வில் இந்­தப் பணி முடி­வ­டை­யும். அதன் பின்­னர் விரைவு சாலை­யோ­ரம் 24 புதிய நகர்ப்­புற குடி­யி­ருப்புப் பகு­தி­கள் உரு­வாக்­கப்­படும். 12 நாடு­க­ளைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் 16 ஆயி­ரம் கோடி மதிப்­புள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன,” என்­றார் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!