இந்திய எல்லைப் பகுதியில் 60,000 சீன ராணுவ வீரர்கள்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்

இந்­தி­யா­வின் வடக்கு எல்­லை­யில் கட்­டுப்­பாட்டு எல்­லைக்­கோடு அருகே சீனா 60,000க்கும் அதி­க­மான ராணுவ வீரர்­க­ளைக் குவித்­துள்­ள­தாக அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வின் கிழக்கு லடாக் எல்­லை­யில் சீனா தொடர்ந்து அத்து­மீ­ற­லில் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் அதை எதிர்­கொள்ள இந்­தி­யா­வும் அப்­ப­கு­தி­யில் கண்­கா­ணிப்பை அதி­க­ரித்து வரு­வ­தாகவும் அவர் சொன்­னார்.

இவ்­வாண்டு மே மாதத்­தில் இருந்து லடாக்­கின் கிழக்­குப் பகுதி­யில் இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரு­வ­தால் இரு­தரப்பு உற­வு­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் நிலை­யில், திரு பொம்­பி­யோ­வின் கருத்து வெளி­வந்­துள்­ளது.

ஜப்­பா­னிய தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் ஜப்­பான், இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த வெளி­யு­றவு அமைச்­சர்­கள் பங்­கேற்ற ‘குவாட்’ மாநாட்­டில் பங்கேற்று விட்டு அமெ­ரிக்கா திரும்­பி­ய­வு­டன் பல்­வேறு நேர்­கா­ணல்­களில் திரு பொம்­பியோ பங்­கேற்­றார். அப்­போது அவர் இந்த மாநாட்­டில் ஆலோ­சிக்­கப்­பட்ட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து வெளிப்­ப­டை­யாக கருத்து தெரி­வித்­தார்.

“இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பா­னைச் சேர்ந்த எனது சக வெளி­யு­றவு அமைச்­சர்­களை நான் சந்­தித்­தேன். அமெ­ரிக்­கா­வை­யும் சேர்த்து இவை அனைத்­தும் பெரிய ஜன­நா­யக நாடு­கள், நான்கு சக்தி­வாய்ந்த பொரு­ளி­யல்­கள் இவற்­றி­டம் உள்­ளன. இவை அனைத்­திற்­கும் சீனா­வின் மோச­மான நடத்தை அச்­சு­றுத்­த­லாக உள்­ளது.

“இந்த விவ­கா­ரத்­தில் இவ்­வ­ளவு கால­மாக நாங்­கள் தூங்­கி­விட்­டோம் என்­பதை நாங்­கள் ஒப்­புக்­கொண்­டோம்,” என்று திரு பொம்­பியோ கூறி­னார்.

சீனா­வின் அச்­சு­றுத்­த­லுக்கு எதி­ராக ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா ஆகிய நாடு­கள் அமெ­ரிக்­கா­வின் உத­வியை எதிர்­நோக்கி உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தோக்­கி­யோ­வில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த ‘குவாட்’ கூட்­டத்­தில் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கரை திரு பொம்­பியோ சந்­தித்­தார்.

அப்­போது இந்­திய-பசி­பிக் பகுதி மட்­டு­மின்றி உல­கெங்­கி­லும் அமைதி, செழிப்பு, பாது­காப்பை உறு­தி­செய்ய இரு­நா­டு­களும் ஒன்றி­ணைந்து செயல்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்து தாங்கள் கலந்து­ உரை­யா­டியதாக திரு பொம்பியோ சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!