ஆட்டின் விலை 1.5 கோடி ரூபாயாம்; 70 லட்ச ரூபாய் வரை ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்

ஆட்டின் விலை 1.5 கோடி ரூபாயாம்; 70 லட்ச ரூபாய் வரை ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்

1 mins read
1626433c-1de9-4f50-bc4b-fc55f814fcaf
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ள அட்பாடி சந்தை கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது.

இந்தச் சந்தையில் நேற்று ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

சங்கோலா தாலுகாவைச் சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர் தம்முடைய ஆட்டை விற்பனைக்குக் கொண்டு வந்தார். ஆட்டை ஏலத்துக்கு விட்ட அவர், அதனை 1.5 கோடி ரூபாய்க்கு விற்க விரும்பினார். அதனால், ஏலம் விட்டார்.

ஆனால், அங்கு கூடியிருந்தவர்கள் 70 லட்ச ரூபாய் வரை அந்த ஆட்டை ஏலத்தில் கேட்டனர்.

ஆனால், ஆட்டின் விற்பனையாளர் 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன் என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

அப்படி அந்த ஆட்டில் என்னதான் சிறப்பம்சம் என்கிறீர்களா? அதன் பெயர்தான்.

ஆம். அந்த ஆட்டிற்கு அதன் உரிமையாளர் 'மோடி' எனப் பெரிட்டு வளர்த்தாராம்.

குறிப்புச் சொற்கள்