அனுப்பி வைத்த தடுப்பூசி மருந்துகளை திருப்பி எடுத்துக்கொள்ளுமாறு இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு தென்னாப்பிரிக்கா கோரிக்கை

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா அனுப்பி வைத்த ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் 1 மில்லியன் டோஸ் மருந்துகளை மீண்டும் எடுத்துக்கொள்ளுமாறு இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போடும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்போவதாக அறிவித்த ஒரு வாரத்துக்குள் இந்த கோரிக்கையை தென்னாப்பிரிக்கா வைத்துள்ளது.

ஆஸ்ட்ராஸெனகாவின் 1 மில்லியன் டோஸ் தடுப்பூசி கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று சேர்ந்த நிலையில் இன்னும் 500,000 டோஸ் தடுப்பூசிகள் இன்னும் சில வாரங்களில் அங்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அந்த நாட்டில் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தென்னாப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய 501Y.V2 ரக கொரோனா தொற்றுக்கு, ஆஸ்ட்ராஸெனகாவின் தடுப்பூசி குறைந்த அளவிலான பாதுகாப்பையே வழங்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா, அதன் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைப் போட இருக்கிறது.

இது குறித்த கேள்விக்கு ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

மேலும், அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்ற பட்டியலில் ஆஸ்ட்ராஸெனகா-ஆக்ஸ்ஃபர்டு தடுப்பூசியை என உலக சுகாதார நிறுவனம் நேற்று சேர்த்திருப்பதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!