அண்ணன் கையில் ஆந்திரா; தங்கை மனதில் தெலுங்கானா

அம­ரா­வதி: ஒருங்­கி­ணைந்த ஆந்­தி­ரா­வில் முதல்­வ­ராக இருந்­த­வர் ஒய்.எஸ்.ராஜ­சே­கர ரெட்டி. அவர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்­தார். கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் ஹெலி­காப்­ட­ரில் சென்­ற­போது விபத்து நிகழ்ந்­த­தால் ராஜ­சே­கர ரெட்டி இறந்­து­விட்­டார்.

அவ­ருக்­குப் பிறகு தனக்கு முதல்­வர் பதவி கிடைக்­கும் என்று அவ­ரு­டைய மக­னான ஜெகன் மோகன் ரெட்டி எதிர்­பார்த்­தார். ஆனால், பதவி எதை­யும் தரா­மல் ஜெகன்­மோ­கன் ரெட்­டியை காங்­கி­ரஸ் ஒதுக்­கி­வைத்­தது.

அத­னால் விரக்தி அடைந்த ஜெகன்­மோ­கன் ரெட்டி, ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் என்ற புதிய கட்­சியைத் தொடங்­கி­னார்.

அவர், பல ஏற்ற இறக்­கங்­களுக்­குப் பிறகு இப்­போது ஆந்­தி­ரா­வில் ஆட்­சியைப் பிடித்து முதல்­வ­ராக ஆட்சி புரிகிறார்.

இவ்­வே­ளை­யில், ஜெகன் மோகன் ரெட்டி ஆந்­தி­ரா­வில் ஆட்­சி­யைப் பிடிக்க உறு­து­ணை­யாக இருந்த அவ­ரின் தங்கையான சர்­மிளா, ஆந்­தி­ரா­வில் இருந்து பிரிந்து தனி மாநி­ல­மாக உள்ள தெலுங்­கானா மீது தன் கவ­னத்­தைத் திருப்பி இருக்­கி­றார்.

தெலுங்­கானாவில் ஆட்­சி­யைப் பிடிக்க வியூ­கம் வகுத்­துள்ள சர்மிளா, அதற்­காக வரும் ஜூலை 8ஆம் தேதி புதிய கட்­சி­யைத் தொடங்­கப்போவ­தாக சனிக்­கி­ழமை அறி­வித்­தார்.

ஜூலை 8ஆம் தேதி, சர்­மி­ளா­வின் தந்­தை­யான ராஜ­சே­கர ரெட்­டி­யின் நினைவு நாள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அன்று தனது கட்­சி­யின் புதிய பெயர், சின்­னம், கொள்கை ஆகி­ய­வற்றை அறி­விக்­கப்போவ­தாக சர்­மிளா தெரி­வித்து இருப்­பது தெலுங்­கா­னா­வில் அர­சி­யல் புய­லைக் கிளப்பி இருக்­கிறது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அந்த மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைச் சந்திப்பதற்காக சர்மிளா காய்களை இப்போதே மிகவும் விவேகமாக நகர்த்துகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!