ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பயிற்சிக் களமல்ல: எட்டு நாடுகள் கூட்டத்தில் திட்டவட்டம்

புது­டெல்லி: தலி­பான்­கள் கட்­டுப்­பாட்­டில் உள்ள ஆப்­கா­னிஸ்­தான் உல­க­ளா­விய தீவி­ர­வா­தத்­தின் புக­லி­ட­மாக மாறி­வி­டக்­கூ­டாது என்­றும் இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இந்­தியா உள்­ளிட்ட எட்டு நாடு­கள் முடிவு செய்­துள்­ளன.

ஆப்­கா­னிஸ்­தா­னில் அதி­கார மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, இந்­தியா தனது பாது­காப்பு, எதிர்­கால வளர்ச்சி ஆகி­ய­வற்றை மைய­மாக வைத்து பல்­வேறு நடவ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

மேலும், தலி­பான்­கள் கட்­டுப்­பாட்­டில் உள்ள ஆப்­கா­னிஸ்­தா­னின் புதிய அரசை அங்­கீ­க­ரிப்­ப­தில் உலக நாடு­கள் அவ­ச­ரம் காட்­டக்­கூ­டாது என்­றும் வலி­யு­றுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில் ஆப்­கான் விவ­கா­ரம் குறித்து ஆலோ­சனை நடத்த மத்­திய அர­சின் ஏற்­பாட்டில் நேற்று முன்­தி­னம் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர்­கள் மாநாடு டெல்­லி­யில் நடை­பெற்­றது. இதில் பங்­கேற்க பத்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட நிலை­யில், சீனா­வும் பாகிஸ்­தா­னும் அழைப்பை புறக்­கணித்­து­விட்­டன.

இதை­டுத்து இந்­தியா, ரஷ்யா, ஈரான், கஜ­கஸ்­தான், கிர்­கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், துர்க்­மெ­னிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான் ஆகிய எட்டு நாடு­கள் மாநாட்­டில் பங்­கேற்­றன.

முத­லில் பேசிய இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல், ஆப்­கா­னிஸ்­தா­னில் ஏற்­பட்டு வரும் மாற்­றங்­கள் அந்­நாட்டு மக்­கள் மத்­தி­யில் மட்­டு­மல்­லா­மல், அண்டை நாடு­க­ளி­லும் வட்­டார அள­வி­லும் பெரும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தும் என்­றார்.

இதர நாடு­க­ளின் பாது­காப்பு ஆலோ­ச­கர்­களும் இதை ஏற்றுக்­கொண்டனர். இதை­ய­டுத்து ஆப்­கா­னிஸ்­தான் தீவி­ர­வா­தி­க­ளின் புக­லி­ட­மாக மாறி­வி­டக் கூடாது என்­றும் தீவி­ர­வா­தத்­திற்கு பயிற்சி அளிக்­கும், திட்­டம் வகுக்­கும் நிதி­யு­தவி செய்­யும் மண்­ணாக மாறி­வி­டக்­கூ­டாது என்­றும் எட்டு நாடு­களும் வலி­யு­றுத்­தின. இது தொடர்­பான தீர்­மா­னம் ஒன்­றும் நிறை­வேற்­றப்­பட்­டது.

மேலும், ஆப்­கா­னிஸ்­தா­னில் அண்­மை­யில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளைக் கண்­டிப்­ப­தா­க­வும் அங்கு நிக­ழும் துய­ரச் சம்­ப­வங்­கள் கவலை அளிப்­ப­தா­க­வும் எட்டு நாடு­களும் தெரி­வித்­துள்­ளன.

"ஆப்­கா­னிஸ்­தான் மக்­க­ளுக்கு அனைத்­து­வி­த­மான மனி­தா­பி­மான உத­வி­களும் தடை­யின்­றிக் கிடைக்க வேண்­டும். அந்த உதவி­கள் நேரடி­யாக அம்­மக்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்­ப­து­டன் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய அர­சாங்­கம் செயல்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்," என்று எட்டு நாடு­க­ளின் பாது­காப்பு ஆலோ­ச­கர்­களும் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!