ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் தடை

பெங்­க­ளூரு: ஹிஜாப் விவ­கா­ரம் தொடர்­பான வழக்கை விசா­ரித்த கர்­நா­டக உயர் நீதி­மன்­றம், அடுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் வரை பள்ளி, கல்­லூ­ரி­களில் மதம் சார்ந்த உடை­களை அணிந்து வர தடை விதித்­துள்­ளது.

நேற்று உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரிது ராஜ் அவாஸ் தலைமை­யி­லான மூன்று நீதி­ப­தி­க­ளைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசா­ரித்­தது.

அப்­போது, மனு­தா­ரர்­கள் தரப்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் சஞ்­சய் ஹெக்டே, பாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் வகுப்­ப­றை­க­ளுக்கு வெளியே நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் கடந்த டிசம்­பர் மாதமே இவ்­வாறான பாகு­பாடு காட்­டப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து பேசிய அர­சுத் தலைமை வழக்­க­றி­ஞர், பள்ளி, கல்­லூ­ரி­களில் பல்­வேறு மதத்­தினர் பல­வி­த­மான உடை­களை அணிந்து வரு­வதை அனு­ம­திக்க இய­லாது என்­றார்.

வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஹிஜாப் விவ­கா­ரம் கார­ண­மாக நாடு முழு­வ­தும் ஆங்­காங்கே மோதல்­கள் நிகழ்­வ­தாக தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

இதற்­கி­டையை, கர்­நா­ட­கா­வில் இந்த விவ­கா­ரம் கார­ண­மாக மூடப்­பட்­டுள்ள பள்ளி, கல்­லூ­ரி­களை மீண்­டும் திறப்­பது குறித்து நேற்று மாலை அம்­மா­நில முதல்­வர் பசவராஜ் பொம்மை ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

வெளி மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் கர்­நா­ட­கா­வில் நில­வும் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்தை­யும் சீர்­கு­லைக்­கும் வித­மாக வன்­முறையைத் தூண்­டும் செயல்­களில் ஈடு­பட வேண்­டாம் என அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், ஹிஜாப் விவ­கா­ரம் தொடர்­பான மனுக்­களை அவ­சர வழக்­கா­கக் கருதி விசா­ரிக்க உச்ச நீதி­மன்­றம் மறுத்­து­விட்­டது.

இது குறித்து விசா­ரணை நடத்தி வரும் கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தின் முடி­வுக்­காக காத்­தி­ருக்­கப் போவ­தாக உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரமணா தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, நேற்று டெல்­லி­யில் அனைத்து இந்­திய மாண­வர் சங்­கம் சார்­பில் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தின்­போது கர்­நா­டக அர­சுக்­கு எதி­ரா­க­வும் ஹிஜாப் அணிய தடை­வி­திக்­கப்­பட்­டதை எதிர்த்­தும் முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.

நேற்று காலை உச்ச நீதி­மன்­றத்தை அணு­கிய மூத்த வழக்­கறி­ஞர் கபில்­ சி­பல், ஹிஜாப் விவ­கா­ரத்தை அவ­சர வழக்­கா­கக் கருதி விசா­ரிக்க வேண்­டும் என தலைமை நீதி­பதி ரம­ணா­வைக் கேட்­டுக் கொண்­டார். ஆனால் தலைமை நீதி­பதி அதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

"எதற்­காக அவ­ச­ரப்­பட வேண்­டும். முத­லில் உயர் நீதி­மன்­றம் முடி­வெ­டுக்­கட்­டும்," என்று கூறி­னார் நீதி­பதி ரமணா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!