'ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத முடியாது'

'ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத முடியாது'

1 mins read
8e267254-ee31-4f88-8a70-1fe80704006c
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் ஹிஜாப் அணிந்து வந்த மாண­வி­கள் பத்­தாம் வகுப்பு தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், ஹிஜாப் அணிந்த மாண­வி­கள் தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள் என கர்­நா­டக அரசு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

கர்­நா­ட­கா­வில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­களில் மாண­வி­கள் ஹிஜாப் உள்­ளிட்ட மத அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்­தும் ஆடை­களை அணிந்து வர மாநில அரசு தடை விதித்­தது. அர­சின் இந்த உத்­த­ரவு செல்­லும் என பெங்­க­ளூரு உயர் நீதிமன்­ற­மும் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கர்­நா­ட­கா­வில் நேற்று பத்­தாம் வகுப்­புக்­கான பொதுத்­தேர்­வு­கள் தொடங்­கின. நேற்று ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாண­வி­கள் தேர்வு அறைக்­குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் ஹிஜாப் தொடர்­பான உயர் நீதி­மன்­றத் தீர்ப்பை மீறும் எவ­ரும் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள் என்று கர்­நாடக கல்­வித்­துறை அமைச்­சர் பி.சி.நாகேஷ் தெரி­வித்­துள்­ளார். அரசு விதி­களை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.