கோதுமையை அடுத்து சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை

உணவுப்பொருள்கள், சர்க்கரை விலை அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை

புது­டெல்லி: கோது­மை­யைத் தொடர்ந்து சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கும் மத்­திய அரசு தடை­வி­தித்­துள்­ளது. பண வீக்­கம் அதி­க­ரித்­ததை அடுத்து மத்­திய அரசு இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.

இதன் மூலம் சர்க்­கரை விலை ஏற்­றத்­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க இய­லும் என மத்­திய அரசு கரு­து­கிறது.

ஏற்­கெ­னவே கோதுமை, சமை­யல் எண்­ணெய் ஏற்­று­ம­திக்கு மத்­திய அரசு தடை­வி­தித்­துள்­ளது. அவை இரண்­டுக்­கும் திடீர் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது. மேலும், நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் வெப்ப அலை அதி­க­ரித்­த­தால், கோதுமை உற்­பத்தி குறைந்­து­போ­னது. இத­னால் கோதுமை விலை வேக­மாக உயர்ந்­தது.

இதே­போல் உலக அள­வில் சமை­யல் எண்­ணெய்க்கு பற்­றாக்­குறை நில­வு­கிறது. இவற்­றைக் கவ­னத்­தில் கொண்ட மத்­திய அரசு, உள்­நாட்­டுத் தேவைக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வித­மாக கோதுமை, சமை­யல் எண்­ணெய் ஏற்­று­ம­திக்கு தடை­வி­தித்­தது. தற்­போது அந்­தப் பட்­டி­ய­லில் சர்க்­க­ரை­யும் இணைந்­துள்­ளது.

சர்க்­க­ரைக்கு தட்­டுப்­பாடு ஏற்­படும் சூழல் உரு­வா­கும் முன்பே மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

கரும்பு அர­வைப் பரு­வத்­தில் சர்க்­கரை இருப்பை பரா­ம­ரிப்­ப­தற்­கா­க­வும் விலையை கட்­டுக்­குள் வைப்­ப­தற்­கும் 2022 ஜூன் 1 முதல் அக்­டோ­பர் 31 வரை சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான தடை நீடிக்­கும்.

உக்­ரேன், ரஷ்யா மோதல் கார­ண­மாக அவ்­விரு நாடு­களில் கோதுமை உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து ஏற்­று­ம­தி­யா­கும் கோதுமை அளவு கடந்த இரு மாதங்­களில் வெகு­வாக அதி­க­ரித்­தது.

இதற்­கி­டையே, தடை­வி­திக்­கப்­பட்ட போதி­லும் உணவு, பொது விநி­யோ­கத் துறை இயக்­கு­ந­ர­கத்­தின் ஒப்­பு­த­லு­டன் சர்க்­க­ரையை பகு­தி­ய­ளவு ஏற்­று­மதி செய்ய முடி­யும்.

இந்­தப் புதிய தடை கார­ண­மாக உள்­நாட்­டில் சர்க்­கரை விலை குறை­யும் என்­றும் உண­வுப் பண வீக்­கம் கட்­டுக்­குள் வரும் என்­றும் நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, உள்­நாட்­டுப் பயன்­பாட்­டுக்­காக அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு 60 முதல் 65 மெட்­ரிக் டன் அளவு சர்க்­கரை இருப்பை பரா­ம­ரிக்க வேண்­டும் என்ற நோக்­கில் ஏற்­று­ம­திக்கு புதிய கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய நுகர்­வோர் நலன், உணவு, பொது விநி­யோக அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!