புகார்: அதிகாரிகள் உத்தரவு

புது­டெல்லி: விளை­யாட்­டுத் திடல் வச­தி­கள் அனைத்­தும் இரவு 10 மணி வரை திறந்து இருக்க வேண்­டும் என்று புது­டெல்லி அதி­கா­ரி­கள் நேற்று ஆணையிட்டனர்.

ஓர் அதி­காரி தன்­னு­டைய நாயு­டன் நடை உலா வரு­வ­தற்­குத் தோதாக ஒரு விளை­யாட்­டுத் திடல் ஒவ்­வொரு நாளும் மாலை­யில் முன்­ன­தா­கவே மூடப்­ப­டு­கிறது என்று புகார் கிளம்­பி­யதை அடுத்து அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

புது­டெல்­லி­யில் இருக்­கும் தியா­க­ராஜ் விளை­யாட்­டுத் திடல் ஐஏ­எஸ் அதி­கா­ரி­யான சஞ்­சீவ் கிர்­வார் தனது நாயு­டன் உலா வரு­வ­தற்கு வச­தி­யாக மாலை 7 மணிக்கு மூடப்­பட வேண்­டிய நிலை இருப்­ப­தாக இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் செய்­தித்­தாள் தெரி­வித்திருந்­தது.

ஆனால் அத்­த­கைய ஒரு நிலை இல்லை என்று இதில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து இருக்­கின்­றன.

இந்த நிலை­யில், புது­டெல்லி அதி­கா­ரி­கள், எல்லா விளையாட்டுத் திடல்­களும் இரவு 10 மணி வரை செயல்­பட வேண்­டும் என்று உத்­த­ரவைப் பிறப்­பித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!