சிவசேனா கட்சி சின்னத்தைக் கைப்பற்ற எதிரணி முயற்சி

முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்பு

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் முதல்வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான கூட்­டணி அர­சுக்கு நெருக்­கடி முற்­றி­யுள்­ளது. இதை­ய­டுத்து முதல்வர் உத்­தவ் தாக்­கரே நடத்திய கூட்­டத்­தில் 13 சிவ­சேனா எம்எல்ஏக்­கள் மட்­டுமே கலந்து கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், கட்­சித் தலைமைக்கு எதி­ராக செயல்­படு­வ­தா­கக் கூறி 12 எம்­எல்­ஏக்­களை தகுதி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று துணை சபா­நா­ய­க­ருக்கு உத்­தவ் தாக்­கரே கோரிக்கை விடுத்­துள்­ளார்.

ஆனால் இதற்­குப் பதி­லடி தரும் வித­மாக தனக்கு ஆத­ர­வாக உள்ள எம்­எல்­ஏக்­க­ளின் கூட்­டத்தை நடத்தி­யுள்­ளார் சிவ­சேனா தலைமைக்கு எதி­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்ள அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே. மேலும் தனது ஆத­ரவு எம்­எல்­ஏக்­கள் 37 பேரின் கையெழுத்­து­டன் மகா­ராஷ்­டிர ஆளு­ந­ருக்­கும் பேரவை துணை சபா­நா­ய­க­ருக்­கும் அவர் கடி­த­மும் எழு­தி­யுள்­ளார்.

மிக விரை­வில் ஏக்­நாத் ஷிண்டே­வுக்கு ஐம்­பது சிவ­சேனா எம்­பிக்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும் என்று அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­களு­ட­னான கூட்­ட­ணியை முறித்­துக்­கொண்டு, மீண்­டும் பாஜ­க­வு­டன் இணைந்து செயல்­பட வேண்­டும் என கட்­சித் தலை­மைக்கு எதி­ராக உள்ள சிவ­சேனா எம்­ஏல்­ஏக்­கள் வலி­யு­றுத்தி வரு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், சிவ­சே­னா­வைச் சேர்ந்த 14 நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­களும் ஏக்­நாத் ஷிண்­டே­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தாக மற்­றொரு தக­வல் வெளி­யாகி உள்ளது.

இதை­ய­டுத்து சிவ­சேனா கட்சி சின்­னத்தை முடக்­கு­வது அல்­லது கைப்­பற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஏக்­நாத் ஷிண்டே தரப்பு மேற்­கொள்­ளும் என்­றும் கூறப்­படு­வ­தால், தொண்­டர்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

இந்­நி­லை­யில், ஏக்­நாத் ஷிண்டே­வு­டன் இருக்­கும் சிவ­சேனா எம்பிக்கள் உட­ன­டி­யாக மும்பை திரும்­பி­னால் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­க­ளு­ட­னான கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யேறு­வ­தாக சிவ­சேனா தலைமை அறி­வித்து இருப்­பது, அவ்­விரு கட்­சி­க­ளை­யும் கோபத்­தில் ஆழ்த்தி உள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இதற்­கி­டையே, ஏக்­நாத் ஷிண்டே­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­தாக கரு­தப்­பட்ட இரண்டு எம்­எல்­ஏக்­கள் மும்பை திரும்பி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!