பெங்களூரில் சுதந்திர தின இலவசப் பேருந்துகள்

பெங்­க­ளூரு: நாட்­டின் 75வது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு பெங்­க­ளூ­ரு­வில் அர­சுப் பேருந்­து­கள் இல­வ­சச் சேவை வழங்­கு­வ­தாக அம்­மா­நில மாந­க­ராப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

சுதந்­திர தினம் மற்­றும் பெங்­க­ளூரு மாந­கர போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் 25ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்­னிட்டு பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. விபத்தை ஏற்­ப­டுத்­தாத பேருந்து ஓட்­டு­நர், சிறப்­பான நடத்­து­நர் உள்­ளிட்ட 150 பேருக்குத் தங்­கப்­ப­தக்­கம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

நாளை சுதந்­திர தினத்­தில் அதி­காலை முதல் நள்­ளி­ரவு 12 மணி வரை அர­சுப் பேருந்­து­களில் பொது­மக்­கள் இல­வ­சச் சேவை­யைப் பெற­லாம்.

இத­னை­ய­டுத்து பெங்­க­ளூ­ரு­வில் உள்ள சுற்­று­லாத் தலங்­கள், வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­களில் மக்­கள் அதி­க­மாக வருகை தரு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!