கடன் தருவதாக அமெரிக்க குடிமக்களை ஏமாற்றிய 16 பேர் கொண்ட கும்பல் கைது

மும்பை: வாடிக்­கை­யா­ளர் சேவை மையம் என்ற பெய­ரில் அமெ­ரிக்க குடி­மக்­களை ஏமாற்றி, பணம் சுருட்­டிய 16 பேர் கொண்ட கும்­பல் மகா­ராஷ்­டி­ரா­வில் சிக்­கி­யது.

இந்­தக் கும்­பல் குறித்து கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் பேரில் அம்­மா­நில காவல்­துறை­யினர் மும்பை­யின் தானே பகு­தி­யில் உள்ள கட்­ட­டத்­தில் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­போது அனை­வ­ரும் கைதா­கி­னர். அவர்­களில் மூன்று பேர் பெண்­கள் ஆவர்.

"அமெ­ரிக்­கா­வில் உள்ளவர்­களை தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொள்­ளும் அந்­தக் கும்பலைச் சேர்ந்­த­வர்­கள், பல்­வேறு கடன்­களை அளிப்­ப­தாகக் கூறி­யுள்­ள­னர். கடன் பெறு­வ­தற்கு ஆர்­வ­மாக உள்­ள­வர்­களை அடை­யா­ளம் கண்டு, தொடர்ந்து பேசி அவர்­க­ளு­டைய வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

"அதன் பின்­னர் அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் உள்ள தொகையை வேறு கணக்­கு­க­ளுக்கு மாற்றி உள்­ள­னர் என்­பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது," என்று மும்பை காவல்­துறை தெரி­வித்­தது.

அமெ­ரிக்­கா­வில் அக்­கும்­ப­லின் முக­வ­ரா­கச் செயல்­பட்ட ஒரு­வர், இந்த மோச­டிப் பணப்­ப­ரி­மாற்­றத்­தில் உத­வி­யுள்­ளார். அமெ­ரிக்­கா­வில் ஏமாற்­றப்­ப­டு­ப­வ­ரின் வங்­கிக் கணக்­கில் இருந்து பணத்தை முறை­கே­டாக எடுக்­கும் அந்­தத் தர­கர், பின்­னர் ஹவாலா முறை மூலம் இந்­தி­யா­வுக்கு அத்­தொ­கையை அனுப்­பி­யுள்­ளார்.

இந்த மோசடிக் கும்பல் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!