முதியோர் அனுபவத்தை பயன்படுத்தும் கர்நாடக அரசு

பெங்களூரு: அர­சுப் பணி­களில் அனு­ப­வம் வாய்ந்த முதி­ய­வர்­களைப் பயன்­ப­டுத்த பாஜக அரசு புதிய திட்­டம் வகுக்கும் என முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தி­னம் பெங்­களூரில் நடை­பெற்ற அனைத்­து­லக முதி­யோர் தின நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது, முதி­ய­வர்­கள், மாற்றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு இல­வச மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என்­றார்.

"முதி­யோர் எந்­தப் பிரச்­சி­னையும் இன்றி வாழ பாஜக அரசு புதிய திட்­டத்தைக் கொண்டு வந்­தது. 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் ஆண்டுக்கு இரு முறை இல­வ­ச­மாக மருத்­துவப் பரி­சோ­தனை செய்து கொள்­வ­து­டன், அவர்­க­ளுக்கு ஏதே­னும் நோய் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டால், அதற்­காக இல­வச சிகிச்­சை­யும் அளிக்­கப்­படும்.

"மாநி­லத்­தில் அனு­ப­வம் வாய்ந்த முதி­ய­வர்­க­ளின் ஆலோ­ச­னை­கள் தேவை­யாக உள்­ளது. குறிப்­பாக அர­சுப் பணி­க­ளுக்கு அனு­ப­வம் முக்­கி­ய­மா­கும்.

"இதற்­காக அரசுப் பணி­களில் அனு­ப­வம் வாய்ந்த முதி­ய­வர்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்வோம்," என்று முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!