கேரளா: புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று, 3 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அதையடுத்து கேரளாவில் அதன் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் புதன்கிழமை காலை 8 மணி வரை புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்ட புதிய தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அத்துடன் தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதார அமைச்சின் இணையத் தளத் தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுதும் புதிதாக 341 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் மட்டும் இதுவரை 2,041 பேர் கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 224 -ஆக உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றால் மக்கள் கவலையடையத் தேவையில்லை. தொற்றுப் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும், புதிய வகை கொரோனா பரவல் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், மக்கள் தொடா்ந்து கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு வகை நோய்கள் இருப்பவா்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வீணா ஜாா்ஜ் தெரிவித்திருந்தாா். அங்கு முதன்முதலில் ஜேஎன்.1 வகைத் தொற்று கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் 60 வயதைத் தாண்டியோரும் சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று அம்மாநிலம் வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகாவின் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் கொண்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது என்றார்.

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படியும், கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தினேஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் புதன்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் தடுப்புப் பயிற்சிகள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலங்கள் வருவதால், விழிப்புணர்வை மக்களிடையே அதிகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!