80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர்

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ தொலைவில் மத்தியப் பிரதேச எல்லையின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது லாரியா டா என்ற கிராமம். இவர்கள் இங்குள்ள நீரூற்றில் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெற்று வந்தனர்.

தற்போது இங்கு மக்கள் தொகை அதிகரித்து விட்டது. ஊற்றில் சுரக்கும் நீர் கிராம மக்களின்தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.

கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக லாரிமூலம் இந்த கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால் இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியும் தண்ணீருக்கே செலவானது.

இதற்கு, முன்பு இங்கு ரூ.4.87 கோடியில் உருவாக்கப்பட்ட குடிநீர் திட்டம் பலனளிக்கவில்லை. இதனால் லாரியா டா கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின் ரூ.10கோடியில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

புவியியல் நிபுணர்கள், பனாரஸ் இந்து பல்லைக்கழக குழுவினர், ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள், உ.பி குடிநீர் வாரிய அதிகாரிகள், நமாமி கங்கை திட்ட அதிகாரிகள் இணைந்து உருவாக்கிய குடிநீர் குழாய் திட்டம் தற்போது பலனளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!