எல்லா பொருட்களும் மொத்த வியாபார விலையில் கிடைக்கும் கடை

முஹம்மது ஃபைரோஸ்

சில்லறைக் கடையில் மொத்த வியாபார விலையில் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்யும்- 'ஆல் இந்தியா சூப்பர் மார்ட்' வாடிக்கையாளர்களை ஈர்க்க மேலும் பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓர் ஆண்டுக்கு மாதம் ஒரு முறை இலவசமாகப் பொருட்களை அள்ளிக் குவிக்க மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கல் காத்திருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதிவரை இங்கு பொருட்கள் வாங்கி அதிர்ஷ்டக் குலுக்கில் பங்குபெறலாம். தகுதிப் பெறு வதற்கு குறைந்தபட்சம் $10க்கு செலவு செய்யவேண்டும்.

சித்திரைப் புத்தாண்டு தினத் தன்று (ஏப்ரல் 14, வியாழன் இரவு 10 மணிக்கு) நடைபெறவிருக்கும் மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கில் தேர்வாகும் மூன்று அதிர்ஷ்டசாலி கள், செலவு செய்த தொகைக்கு ஈடான மதிப்பிற்கு பொருட்களை ஓர் ஆண்டுக்கு (14.04.2016= 13.04.2017) மாதம் ஒருமுறை இலவசமாகப் பெறுவர். லிட்டில் இந்தியாவில் நோரிஸ் சாலையில் அமைந்துள்ள இந்த நான்கு மாடிக் கடை, சென்ற ஆண்டு நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு திறக்கப்பட்டது. தற்போது இங்கு கிட்டத்தட்ட 40 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். லிட்டில் இந்தியாவில் இயங்கும் பெரிய கடைகள் வரிசையில் புதிய வரவான 'ஆல் இந்தியா சூப்பர் மார்ட்' உள்ளூர் மற்றும் வெளி நாட்டு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரு கிறது.

41, நோரிஸ் சாலையில் அமைந்துள்ள நான்கு மாடி சில்லறை விற்பனைக் கடையான 'ஆல் இந்தியா சூப்பர் மார்ட்' வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிர்ஷ்ட குலுக்கலை நடத்துகிறது. படம்: ஆல் இந்தியா சூப்பர் மார்ட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!