வெயில் காலத்தில் நிவாரணம் தரும் இளநீர்

வெயில் காலங்களில் இளநீர் பல நன்மைகளைத் தருகிறது என்று சொன் னால் அது மிகையன்று. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இளநீரின் நன்மைகள் குறித்து பார்ப்போம். சுட்டெரிக்கும் வெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இளநீர் மருந்தாகவும் இருந்து நிவாரணம் தரக்கூடியது. இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்துவந்தால் வயிற்று வலி சரியாகும். வெயில் காலங்களில் ஏற்படும் வெப்பத்தி னால் உள் உறுப்புகள் செயல்பாடுகள் குறையும். சிறுநீர் சரிவர கழிக்க முடியாத நிலை, எரிச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய வை ஏற்படக்கூடும்.

இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை இளநீருக்கு உண்டு. இளநீர் நோய் நீக்கியாகப் பயன்படுகிறது. அதுமட்டு மல்லாது, கொழுப்புச் சத்தைக் குறைக்க கூடியது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. வியர்குருவுக்கு மேல்பூச்சாக இளநீரை பயன்படுத்தலாம். இளநீரில் உள்ள வழுக்கை பகுதியை நசுக்கி மேல்பூச்சாக போடுவதன் மூலம் வியர்குரு, அம்மை, அக்கி கொப்பளங்கள் சரியாகும். வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு, கண் எரிச்சலுக்கான மருந்துகளை இளநீரைக் கொண்டு தயாரிக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!