கதைக்களத்தில் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து படைக் கும் செப்டெம்பர் மாதக் கதைக் களம், வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, 5 கேம்பல் லேனில் அமைந்துள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறவிருக் கிறது. கதைக்களத்தில் இந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசினை வென்ற எழுத்தாளர் திரு. சித்துராஜ் பொன்ராஜ் 'என் சிறுகதை அனுபவங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுவார். கதைக்களம் போட்டிக்கு கதைகளும் கதை விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் மாதக் கதைக்களத் துக்கான தொடக்கவரி ‚'அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்க வில்லை'.

இந்தத் தொடக்கவரியில் ஆரம்பித்து 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் கதைகளை எழுதி அனுப்பலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு சிறுகதையைப் பற்றி 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் விமர்சனம் எழுதி அனுப்பலாம். கதைகளையும், விமர்சனங் களையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி aavanna 19@gmail.com, rvairamr@ gmail.com. கதைகளை அடுத்த மாதம் 28 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டிக்கு வந்த கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந் தெடுக்கப்பட்டு முறையே 50 வெள்ளி, 30 வெள்ளி, 20 வெள்ளி ஆகிய மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். வரும் விமர்சனங் களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு முறையே 50 மற்றும் 30 வெள்ளி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேற்கப்படு கிறார்கள். மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் துணைச் செயலாளர் இராம. வயிரவனைத் 93860497 எனும் கைபேசி எண் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!