‘வாரணம்’ ஓவியக் கண்காட்சி

அரிய ஓவியப் படைப்புகளைக் கண்டு ரசிக்க சிறந்த வாய்ப்பாக அமைகிறது வாரணம் ஓவியக் கண்காட்சி. சிங்கப்பூரின் இந்திய சமூகத் தைச் சேர்ந்த பலதரப்பட்ட 25 ஓவியக் கலைஞர்களின் பல்வேறு படைப்புகள் இந்த வாரம் நடக்கவுள்ள இந்த ஓவியக் கண் காட்சியில் இடம்பெறுகின்றன. தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சி எண் 140, ஹில் ஸ்திரீட்டில் உள்ள தகவல் தொடர்பு அமைச்சின் முதல் தளத்தில் உள்ள காட்சிக் கூடத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்