கம்போங் கிளாம் சமூக மன்றத்தில் தீபாவளி குதூகலம்

ஜாலான் புசார், கம்போங் கிளாம் இந்தியர் நற்பணி செயற்குழுக்கள் அவற்றின் தீபாவளிக் கொண் டாட்ட நிகழ்ச்சியைக் கடந்த 12ஆம் தேதியன்று கம்போங் கிளாம் சமூக மன்றத்தில் நடத் தின. இந்த இரண்டு சமூக மன்றங் களின் இந்தியர் நற்பணி செயற் குழுக்கள் ஒன்றிணைந்து தீபா வளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல்முறை.

இந்த நிகழ்ச்சிக்கு ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய வட்டார மேயருமான திருவாட்டி டெனிஸ் புவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஏறத்தாழ 450 பேர் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். தீபங்கள் ஏந்திய சிறாருடன் மயிலாட்டமும் பொய்க்கால் குதிரை ஆட்டமும் சிறப்பு விருந் தினர் திருவாட்டி புவாவை நிகழ்ச் சிக்கு வரவேற்றன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அதன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான திரு முகம்மது இட்ரிஸ் வரவேற் றார்.

தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி டெனிஸ் புவா (நடுவில்). படம்: ஜாலான் புசார், கம்போங் கிளாம் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுக்கள்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்