அனைத்துலக யோகா நாளைக் கொண்டாடும் சிங்கப்பூர்

சுதாஸகி ராமன்

இன்று ஜூன் 21ஆம் தேதி உலகெங்கும் அனைத்துலக யோகா நாளாகக் கொண்டாடப் படுகிறது. இதனைஒட்டி சிங்கப் பூரிலும் பல இடங்களில் யோகா ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் விளையாட்டு மைதானத்திற்கு அருகே உள்ள காலாங் பயிற்சித் திடலில் பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது ‘நிக்கம் குருஜி யோகா குட்டிர்’ யோகா பள்ளி. ஆண்டுதோறும் இந் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வரும் இந்தப் பள்ளி, நூற்றுக் கணக்கான யோகா பிரியர்களை பயிற்சியில் ஈடுபடுத்துகிறது. மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியைப் பள்ளி இலவசமாக நடத்துகிறது.

இன, மொழி, சமயம் என்ற பாகுபாடின்றி இனிய மாலைப் பொழுதில் பங்கேற்பாளர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு தங்களது உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சி ‘ஆக்டிவ் எஸ்ஜி’ என்ற அமைப் புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் ஸ்ரீ நாராயண மிஷனும் அனைத்துலக யோகா தினத்தை சென்ற வாரம் கொண்டாடியது.

காலாங் பயிற்சித் திடலில் யோகா பயிற்சியில் ஈடுபடும் ஆர்வலர்கள். படம்: நிக்கம் யோகா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon