மூத்த கவிஞர்களைச் சிறப்பித்த கவிமாலையின் கவிதைத் திருவிழா

தாம். சண்முகம்

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் என்ற குறளுக்கிணங்க சிங்கப்பூரின் மூத்த கவிஞர் களைப் போற்றி பாராட்டி சிறப்பு செய்து கவிமாலை பேருவகை அடைந் தது. இனியவை நாற்பது போல், நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்ந்து கொண் டிருக்கின்ற நாற்பது கவிஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்திய கவி மாலை அமைப்பு, கடந்த 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத் தில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியி ல் 16 மூத்த கவிஞர்களை மேடையேற்றி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தது நெகிழ்வான காட்சியாக இருந்தது. கவிஞர்கள் சிலர் மறைந்துவிட் டாலும் அவர்களின் குடும்பத்தாரை அழைத்து சிறப்பித்தது அவர்க ளின் படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீ காரமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் பங்கெடுத்த கவிஞர் பாத்தென்றல் முருகடி யான், "மூத்த கவிஞர்களைச் சிறப்பித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. இனி வரும் காலங் களிலும் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் தொடரவேண்டும். குறிப்பாக அடுத்த தலைமுறையினரையும் சிறப்பித்து ஊக்கப்படுத்த வேண் டும்," என்று கூறினார்.

இந்தாண்டு மார்ச் மாதம் கவிமாலை நடத்திய பயிலரங்கில் நடைபெற்ற கவிதை மனனப்போட்டி, கவிதை எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 'கவிதைத் திருவிழா' அன்று $3000 பெறுமான ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசை தட்டிச் சென்ற செயின்ட் மார்கரெட் உயர்நிலைப் பள்ளி மாணவி நூருல் ஆஃபியா, நூல கத்திற்கு சென்று நிறைய கவிதைப் புத்தகங்கள் வாசித்த தாகக் கூறினார்.

திருவிழா' என்ற தலைப்பில் நடைபெற்ற மாதாந்திர கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் எட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுப் பிரிவில் திரு ராஜூ ரமே‌ஷும், மரபுப் போட்டி பிரிவில் திரு சி கருணாகரசும் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.

நிகழ்வில் கவிமாலை ஆண்டு தோறும் வழங்கும் இளங்கவிஞ ருக்கான தங்கமுத்திரை விருது கவிஞர் திரு பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது 'சிறகின் பசி' நூலை எழுதிய சி.கருணா கரசுவுக்கு வழங்கப்பட்டது. கணையாழி விருது இந்தாண்டு பாத்தூறல் முத்து மாணிக்கத்திற்கு வழங்கப்பட்டது. கவிமாலை கௌரவித்த மூத்த கவிஞர்களுடன் கவிமாலை அமைப் பின் தலைவர் இறைமதியழகன், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ஆர்.தினகரன், வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ரா.ராஜாராம், தமிழர் இயக்கத்தின் செயலாளர் திரு நாராயணசாமி. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர் இந்த ஆண்டுக்கான கணையாழி விருது பெற்ற பாத்தூறல் முத்து மாணிக்கம். படம்: கவிமாலை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!