கண் பார்வையைச் சீராக்க உதவும் பயிற்சிகள்

கண்­கள், கட­வுள் நமக்கு அளித்த ஒரு விலை­ம­திப்­பற்ற பரிசு. இதன் மூலம்தான் உல­கின் அழகை நம்­மால் ரசிக்க முடி­கிறது. இருப்­பி­னும், இன்­றைய சூழ­லில், கணினி, கைபே­சி­க­ளின் பயன்­பாடு வெகு­வாக அதி­க­ரித்­துள்­ள­தால், நமது கண்­க­ளின் ஆரோக்­கி­யத்தை இந்த 'டிஜிட்­டல்' ஒளித் திரை­கள் வெகு­வா­கப் பாதிக்­கின்­றன என்­கின்­ற­னர் கண் மருத்­து­வர்­கள்.

கிட்­டப் பார்வை (Myopia), தூரப் பார்வை (Hyperopia), சமச்­சீ­ரற்ற பார்வை (Astigmatism), வெள்­ளெ­ழுத்து (Presbyopia) என இந்­தப் பார்­வைக் குறை­பா­டு­கள் வித­வி­த­மான பெயர்­களில் வரை­ய­றுக்­கப்­படு­கின்­றன.

எந்த வய­தி­லும் கிட்­டப் பார்வை, தூரப் பார்வை, சமச்­சீ­ரற்ற பார்வை ஏற்­ப­ட­லாம். 40 வய­தைக் கடந்த வர்­க­ளுக்கு வெள்­ளெ­ழுத்து குறை­பாடு தோன்­றும்.

இந்த அனைத்து வித­மான பிரச்­சி­னை­க­ளுக்­கும் இயற்கை முறை­யில் தீர்வு காண முடி­யும் என்­கி­றார் கேர­ளா­வைச் சேர்ந்த தலைமை கண் மருத்­து­வர் டாக்­டர் நாரா­ய­ணன் நம்­பூ­திரி.

இதற்­கான உண­வு­மு­றை­கள், வாழ்க்­கை­மு­றை­கள், கண் பயிற்­சி­களை முறை­யா­கப் பின்­பற்றி வந்­தால் அனைத்­துக் கண் குறை­பாடு­க­ளை­யும் நீக்­க­மு­டி­யும் என்­கிறார் இவர்.

கண் நோய்­கள் குண­மாக இயற்கை வழி­மு­றை­கள்:

கட்­டா­ய­மாக காலை­யில் இயற்கை உண­வும் மதி­யம் ஒரு­வேளை மட்­டும் சமைத்த உண­வை­யும் சாப்­பிட்டு வரவேண்­டும். பழங்­கள், விதை­கள், காய்­க­றி­கள் உள்­ளிட்ட இயற்கை உணவுகளைச் சமைக்­கக் கூடாது.

பப்­பா­ளிப்­ப­ழம், மாம்­ப­ழம், கேரட், பொன்­னாங்­கண்ணி கீரை, மற்ற கீரை­கள், கறி­வேப்­பிலை ஆகி­ய­வற்றை அதிக அள­வில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்­டும்.

வாழைப்­ப­ழம், திராட்­சைப்­ப­ழம், எலு­மிச்சை ஜூஸ், ஆரஞ்­சுப் பழம் ஆகி­ய­வை­யும் நல்­லது.

கண் பார்வை தெளி­வா­கப் பெரி­தும் உத­வக்­கூ­டி­யது பப்­பாளியும் மாம்­ப­ழமும்­தான்.

வாரத்­தில் ஒரு­நாள், மஞ்­சள் பூ கரி­ச­லாங்­கண்­ணிக் கீரை, நாட்டு நெல்­லிக்­காய் சாறு, ஆவா­ரம்பூ, முருங்­கைக் கீரை, பொன்­னாங்­கண்ணி கீரை­யைச் சாப்­பிடவேண்­டும்.

எலு­மிச்­சம் சாறு தேனு­டன் சேர்த்து 21 நாட்­கள் குடித்­து­வர கண் நோய்­கள் தீரும். ஒரு நாளைக்கு ஒரு எலு­மிச்­சம்பழம் பயன்­ப­டுத்­த­லாம்.

கண் பார்வை குறைவு நீங்க ஒரு­நாள் கேரட் சாறு, மறு­நாள் கறி­வேப்­பிலை-நெல்லிச் சாறு என நாள்­தோ­றும் அருந்தவேண்­டும். இவற்றை மாற்றி மாற்றி அருந்­த­லாம். சுவை தேவைப்­பட்­டால் மட்­டுமே, தேங்­காய்ப்­பால், தேன் அல்­லது நாட்டு வெல்­லம் சேர்த்­துப் பரு­க­லாம்.

பசித்த பிறகே உணவு உண்­ணும் பழக்­கத்­துக்கு வர­வேண்­டும். இரவு 8 மணிக்கு மேல் சமைத்த உண­வு­க­ளைத் தவிர்க்­க­வும். பசித்­தால் பழங்­க­ளைச் சாப்­பி­ட­வும்.

இந்த உணவு முறை, கண் பயிற்­சி­கள், கண் கழு­வும் முறை­கள் ஆகி­ய­வற்­றைத் தொடர்ந்து செய்து வர விரை­வில் கண்­ணா­டியைக் கழற்றி வைக்­கும் வகை­யில் கண் பார்வை தெளி­வாகிக்கொண்டே வரும் என்று கூறுகின்றனர் கண் பராமரிப்பு நிபுணர்கள்.

 

சிமிட்டி கழுவுவது முக்கியம்

இதுபோல் கண் கழுவும் முறையும் சிறந்த பலனைத் தந்து, கண்ணாடியை கழற்றி வைக்கப் பெரிதும் உதவும். உள்ளங்கையில் தண்ணீரை நிரப்பி அதில் கண்களை வைத்து 15 முதல் 20 முறை வரை சிமிட்டலாம். இது எளிமையான பயிற்சி. ஆனால், விரைவில் நல்ல பலன் தரக்கூடிய முக்கியமான பயிற்சி. இரு கண்களையும் காலை, மாலை இருவேளையும் கழுவி வருவதால் கண்கள் குளிர்ச்சி அைடந்து பார்வை சீராகும்.

இந்தப் பயிற்சியைத் தினமும் செய்து வந்தால் ஆயுள் முழுவதும் கண் பார்வை குன்றாது. ஒருவேளை பார்வை குன்றியிருந்தால் சீராகலாம் என நம்பப்படுகிறது.

 

கண்கள் குளிர்ச்சி பெற

கண் கழுவும் முறையைச் செய்ய முடியாதவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். பொதுவாகக் கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல் நல்லது. படுத்திருந்த நிலையில் ஈரப்பஞ்சு அல்லது ஈர பருத்தித் துணியை இரு கண்கள் மீதும் நாள்தோறும் காலையும் இரவும் 15-20 நிமிடங்கள் வரை வைக்கலாம். வெள்ளரி சாற்றை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்க கண் எரிச்சல் நீங்கும்.

செய்தி/ படங்கள்:

இந்திய, தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!