மனவுறுதியை வலுப்படுத்தலாம்

கவ­லை­யின்றி இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்ப உல­கில் பலர் ஆவ­லா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர். கொள்ளை­நோய்ப் பர­வல் தொடங்கி சுமார் ஈராண்­டு­கள் ஆகி­விட்­டன. இத­னால் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைப் பறி­கொ­டுத்­தது, வேலையை இழப்­பது, நிதிப் பற்­றாக்­குறை உள்­ளிட்ட சவால்­க­ளைப் பலர் எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர்.

இப்­ப­டிப்­பட்ட சிக்­க­லான சூழலை இந்­தத் தலை­மு­றை­யில் பலர் பார்த்­தி­ருக்­க­மாட்­டார்­கள்.

இத்­தனை சவால்­க­ளைக் கையாள்­வதே பல­ருக்கு நினைத்­துப் பார்க்­க­மு­டி­யாத ஒன்று. ஆனால் இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் எந்­தக் காலத்­துக்­கும் கைகொ­டுக்­கும் ஓர் அம்­சத்தை வளர்த்­துக்­கொள்­ள­லாம். அது­தான் மன­வு­றுதி.

இவ்­வ­ளவு பெரிய நெருக்­க­டிக்­குப் பிறகு முன்­பி­ருந்­த­தைப்போல் வாழ்க்கை இனி இருக்­காது என்­கிறார் குடும்பநல ஆலோ­ச­கர், கல்­வி­யா­ளர், ஆய்­வா­யர் ஆகிய பணி­களை மேற்­கொள்­ளும் 87 வயது டாக்­டர் பாஸ். இரண்­டாம் உல­கப் போரை­யும் பார்த்த இவர், வாழ்க்­கை­யில் மாற்­றம் ஒன்றே மாறா­தது என்­பதை வலி­யு­றுத்­து­கிறார்.

மாற்­றங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு மனி­தர்­கள் மாறா­விட்­டால் நாம் வளர்ச்சி­ய­டை­யப் போவ­தில்லை என்று இவர் சொல்­கி­றார்.

வேதனை தரும் நிகழ்­வு­க­ளுக்கு மத்­தி­யில் நமது மன­வு­று­தியை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வாய்ப்பு அமை­கிறது என்று டாக்­டர் பாஸ் கூறு­கி­றார்.

இத்­த­கைய குணா­திச­யங்­கள் பொது­வாக ஒரு­வ­ருக்­குப் பிற­வி­யிலேயே இருக்க­வேண்­டும் எனப் பலர் கரு­து­வ­துண்டு. ஆனால் எந்த வய­தி­லும் பல்வேறு குணா­தி­சயங்­கள், எண்­ணங்­கள், செயல்­கள் ஆகி­ய­வற்­றைப் பின்­பற்­ற­மு­டி­யும் என்­பது இவர் கருத்து. மனவுறுதியை வளர்த்­துக்­கொள்­ளத் தமது புதிய புத்­த­கத்­தில் சில ஆலோ­ச­னை­களை வழங்­கி­யுள்­ளார்.

கொவிட்-19 கிரு­மிக்­குப் பலி­யோ­னோ­ரின் நெருக்­க­மா­ன­வர்­களும் வாழ்க்­கையை வேறு கண்­ணோட்­டத்­தில் பார்த்து மனத்­திற்கு ஆறு­தல் தேடு­வ­து­டன் புது நம்­பிக்­கை­யு­டன் வாழ­லாம். உதா­ர­ண­மாக, நோய்க்­குப் பலி­யான ஒரு­வ­ரின் உற­வி­னர்­கள் அந்த நோயால் அவதிப்­படும் மேலும் பல­ருக்கு உதவிக்­க­ரம் நீட்­ட­லாம்.

இந்­தக் கால­கட்­டத்­தில் உற்­சாகத்­து­டன் இருப்­பது சவா­லான ஒன்­று­தான். ஆனால் அதை­யும் மீறி நம்­பிக்­கையை இழக்­கா­மல் சூழ­லுக்­கேற்ப மா­றிக்­கொண்­டால் இது­வும் கடந்து போய்­வி­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!