உடல் பருமனுக்குப் புதிய தீர்வு

உடல் பரு­ம­னைக் கையா­ள­ போது­மான தூக்­கம் உத­வக்­கூ­டும் என்­கிறது ஓர் ஆய்வு. இது, inews.co.uk இணை­யத்­தளத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ஆய்­வில் பங்­கேற்ற 80 பேரில் சரா­ச­ரி­யாக ஒரு­வ­ருக்கு, மூவாண்­டு­களில் ஒரு நாளைக்­குக் கூடு­த­லாக 72 நிமி­டங்­கள் தூங்கி­ய­தன் மூலம் சுமார் 11.8 கிலோ­கி­ராம் உடல் எடை குறைந்­தது. கூடு­தல் நேரம் தூங்­கி­ய­தால் ஆய்­வின் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குப் பசி எடுப்­பது குறைந்­தது.

இதைத் தொடர்ந்து அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு நாளைக்கு உட்­கொண்ட உண­வின் அளவு 279 கேலரிக்­கள் குறைந்­தன. இது, செரி­மா­னத்­திற்கு உதவு­வ­தா­கச் சொல்­லப்­படும் மூன்று 'சாக்­லெட் டைஜெஸ்­டிவ் பிஸ்­கட்டு'களின் கேலரிக்களுக்கு சமம்.

பங்­கேற்­பா­ளர்­க­ளின் உடல் எடை குறை­வ­தற்கு இது ஒரு கார­ணம்.

"சமு­தா­யத்­தில் பர­வ­லா­கக் காணப்­படும் உடல் பரு­மன் பிரச்­சி­னைக்கு எதி­ரான போராட்­டத்­தில் போது­மான தூக்­கம் தீர்­வாக அமை­ய­லாம்," என்று சி­காகோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சுவாச மருத்து­வர் எஸ்ரா டசாலி கூறி­னார்.

"ஆய்­வின் பங்­கேற்­பா­ளர்­கள் உடல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிக்­கா­மல் தாங்­கள் உட்­கொள்­ளும் கேல­ரிக்­க­ளைக் குறைத்­துக்­கொண்­ட­னர், இத­னால் உட்­கொண்ட கேல­ரிக்­க­ளின் அளவு உடல் பயன்­ப­டுத்­திய கேல­ரிக்­க­ளை­வி­டக் குறைவு, இது அவர்­கள் உடல் எடை குறைய உதவியது," என்­றும் டாக்­டர் டசாலி குறிப்­பிட்­டார்.

பங்­கேற்­பா­ளர்­க­ளின் உடல் ரீதி­யிலான நட­வ­டிக்­கை­களில் மாற்­றம் ஏதும் இல்­லா­த­போது கூடு­தல் நேரம் தூங்­கு­வ­தன் மூலம் அவர்­களுக்­குப் பசி எடுப்­பது குறைந்­த­தற்­கான கார­ணம் அவ­ருக்­குப் புரி­ய­வில்லை. எனி­னும், இர­வில் அமை­தி­யா­கத் தூங்­கு­வது உட­லில் பசியை ஏற்­ப­டுத்­தும் அம்­சத்தை சீராக்­க­லாம் என்­பது அவ­ரின் விளக்­கம்.

இந்த ஆய்வு முடி­வு­கள் 'ஜாமா மெடிக்­கல் ஜர்­னல்' எனும் மருத்­துவ சஞ்­சி­கை­யில் வெளி­யா­கி­யுள்­ளது. 'பிஎம்ஐ' எனப்­படும் உடல் எடை­யைக் கணிக்­கும் உடல் எடைக் குறி­யீடு 25லிருந்து 30 வரை இருந்­த­வர்­கள் இதில் பங்­கேற்­ற­னர்.

உடல் எடைக் குறி­யீடு 30க்கு மேல் இருந்­தால் ஒரு­வர் பரு­ம­னாக இருக்­கி­றார் என்று பொருள். இதன் தொடர்­பில் எதற்­கும் மருத்­து­வர்­களையோ சுகாதாரத்துறை நிபு­ணர்­களையோ நாடு­வது நல்­லது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!