வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு ஏற்படும் பாத வலி

கொவிட்-19 சூழல் கார­ண­மாக பலர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்து வரு­கின்­ற­னர்.

இவ்­வாண்டு அந்­நி­ல­வ­ரம் மாறப்­போ­வ­தா­க­வும் தெரி­ய­வில்லை. இதன் அடிப்­ப­டை­யில், வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தால் ஏற்­படும் உடல் வலி­க­ளால் பலர் துன்­பப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கை­யோ­ருக்கு முதுகு, கழுத்து போன்ற இடங்­களில் வலி ஏற்­ப­டு­வது வழக்­கம். ஆனால், எதிர்­பாரா வித­மாக பல­ருக்­கும் இப்­போது பாதம் தொடர்­பான பல பிரச்­ச­னை­களும் ஏற்­பட்­டுள்­ளன.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் முறை கடந்த ஏப்­ரல் மாதத்­தில் தொடங்­கி­ய­தி­லி­ருந்து பாத வலி அதி­க­ரித்­துள்­ள­தாக எலும்பு, மூட்டு அறு­வை­சி­கிச்சை நிபு­ணர்­கள் குறிப்­பி­டு­கின்­றார்­கள்.

இது­போன்ற பிரச்­ச­னை­க­ளின் எண்­ணிக்கை இரண்­டி­லி­ருந்து மூன்று மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார் மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா மருத்­து­வ­

ம­னை­யின் டாக்­டர் விக்­டர் சியா. அதே சம­யம், வேலை பார்ப்­ப­வர்

களுக்­கி­டையே இப்­பி­ரச்­ச­னை­கள் ஏறத்­தாழ பத்­தி­லி­ருந்து பதி­னைந்து விழுக்­காடு வரை உயர்ந்­துள்­ள­தாக மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யின் டாக்­டர் கெவின் கூ குறிப்­பிட்­டுள்­ளார்.

பாத வலி கொண்ட நோயா­ளி­க­ளின் அதி­க­ரிப்பை 'ராபிட் ஃபிசியோ­கே­ரின்' மூத்த தலைமை இயன் மருத்­துவ நிபு­ண­ரான திரு ஜான் ஆப்­ர­ஹா­மும் கவ­னித்­துள்­ளார்.

ஏன் பாத வலி ஏற்­ப­டு­கிறது?

சரி­யான கால­ணி­களை அணி­யா­மல் கயிற்­றாட்­டம் ஆடு­வது, தவ­றான கால­ணி­களை அணிந்து கொண்டு நீண்ட தூரத்­திற்கு நடப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை ஒரு­வர் புதி­தாக தங்­கள் அன்­றாட நட­வ­டிக்­கை­களில் சேர்த்­துக்­கொள்­வது அல்­லது திடீ­ரென்று சில நட­வ­டிக்­கை­க­ளின் தீவி­ரத்தை அதி­க­ரிப்­பதே பெரும்­பா­லான பாத வலி­க­ளுக்குக் கார­ணங்­க­ளாக இருக்­க­லாம் என்று 'கோர் கான்­செப்ட்­ஸின்' மூத்த தலைமை இயன் மருத்­துவ நிபு­ண­ரான திரு சங் சய் துவான் கூறி­யுள்­ளார்.

'ப்லான்­டர் ஃபாசியை­டிஸ்' எனப்­படும் பாத வளைவு வலியே

கால­ணி­கள் அணி­யா­மல் வீட்­டில் நடப்­ப­தால் ஏற்­ப­டக்­கூ­டிய வலிக்­கான முக்­கிய கார­ண­மா­கும் என்று 'ஐலண்ட் ஆர்த்தோபீடிக்ஸ் குரூப்­பின்' மூத்த ஆலோ­சக எலும்பு, மூட்டு அறு­வை­சி­கிச்சை நிபு­ண­ரான டாக்­டர் கௌரீ­சன் தேவேந்­தி­ரன் குறிப்­பி­டு­கின்­றார்.

'ப்லான்­டர் ஃபாசியா', பாதத்­தின் வளை­விற்கு ஆத­ரவு அளித்து, அதிர்­வு­க­ளைத் தாங்கி, குதி­காலை காலின் முன்­ப­கு­தி­யோடு

இணைக்­கும் தசை­யா­கும்.

கால­ணி­கள் அணி­யா­மல் நடப்­பது பாதங்­க­ளுக்கு எவ்­வித ஆத­ர­வை­யும் அளிக்­காது என்­ப­தால், 'ப்லான்­டர் ஃபாசியை­டிஸ்' இருக்­கின்­ற­வர்­கள் மரம் மற்­றும் கான்­கி­ரீட் போன்ற தரை­களில் நீண்ட நேரங்­க­ளுக்கு கால­ணி­கள் அணி­யா­மல் நடப்­பதை தவிர்க்­கு­மாறு பல நிபு­ணர்­கள் பரிந்­து­ரைப்­ப­தா­கக் குறிப்­பி­டு­கின்­றார் டாக்­டர் சியா. மேலும், சரி­யான கால­ணி­கள் பாதங்­க­ளுக்­கும் பாத வளைவு

களுக்­கும் அதிக ஆத­ரவை அளிக்­கக்­கூ­டி­ய­வை­யாக அமை­கின்­றன என்று அவர் கூறி­னார்.

அதோடு, தட்­டை­யான பாதங்

களை­யும் தாழ்­வான பாத வளைவு களை­யும் கொண்­ட­வர்­க­ளுக்கு குதி­கா­லி­லும் பாத தசை­க­ளி­லும் அதிக அழுத்­தம் ஏற்­ப­ட­லாம் என்று குறிப்­பி­டு­கின்­றார் திரு அப்­ர­ஹாம்.

மேலும், கால் ஆணி­கள், நியூ­ரோமா எனப்­படும் நரம்­புக்­கட்டி மற்­றும் கண்­ட­றி­யப்­ப­டாத முடக்கு வாதம் போன்­ற­வை­யும் வலியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வை­யாக

அமை­கின்­றன என்று அவர் கூறி­னார். தற்­போது வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும்­போது ஒரு­வரை துன்­பப்படுத்­தும் இது­போன்ற வலி­கள் முன்பு வேலைக்கு சென்­ற­போது செய்த தவ­று­க­ளின் விளைவு

களா­க­வும் இருக்­கக்­கூ­டும்.

'ஹை ஹீல்' வகை கால­ணி­களை அடிக்­கடி அணி­யும் பல பெண்­க­ளுக்கு சுருக்­கப்­பட்ட குதி­கால் தசை­நார் அல்­லது இறுக்­க­மான கெண்­டைக்­கால் தசை இருக்­கின்­றது என்று டாக்­டர் கூ தெரி­வித்­தார். இது 'ப்லான்­டர் ஃபாசியா' தசை­யின்­மிது மேலும் அதி­க­மான அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி 'ப்லான்­டர் ஃபாசியை­டிஸ்' உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யத்தை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் அவர் கூறி­னார்.

வெறும் காலில் நடப்­பது

பாதங்­க­ளுக்கு நல்­லதா?

கால­ணி­கள் அணி­யா­மல் வெறும் காலில் நடப்­பது தசை­களை துடிப்­பாக வைத்­தி­ருக்­கும் என்­றும், கால் தரை­யில் படும்­போது நம்மை சம நிலை­யில் வைத்­தி­ருப்­ப­தற்­காக நம் பாதங்­களில் உள்ள தசை­கள் அதி­க­மாக வேலை பார்க்­கும் என்­றும் திரு சங் குறிப்­பிட்­டார். மேலும், அது இடுப்பு, முட்டி போன்ற மூட்டு களை­யும் மேம்­ப­டுத்­தக்­கூ­டும் என்று திரு கூ குறிப்­பிட்­டார்.

ஆனால், தட்­டை­யான பாதம் போன்ற பாதப்­பி­ரச்­ச­னை­கள் உள்ள ஒரு­வ­ருக்கு முன்பே 'நோன் ஆப்­டி­மல் கெயிட் மெகா­னிக்ஸ்' போன்ற பிரச்­ச­னை­கள் இருந்­தால், வெறும் காலில் அள­வுக்கு அதி­க­மாக நடப்­பது அவ­ரின் பாதங்­க­ளின் மீது அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி சில இடங்­களில் வலியை உண்­டாக்­கக்­கூ­டும்.

நீங்­கள் என்ன செய்­ய­லாம்?

'ப்லான்­டர் ஃபாசியை­டி­ஸாக' இருந்­தால், வலி அதி­க­மாக இருக்­கும் முதல் சில நாட்­க­ளுக்­குப் பிறகு நீங்­கள் நடந்­த­வாறு 'ப்லான்­டர் ஃபாசியாவை' சரிப்­ப­டுத்­தி­னால் வலி குறை­யும்.

மேலும், டாக்­டர் கௌரீ­சன் பரிந்­து­ரைக்­கும் ஆலோ­ச­னையை பின்­பற்றி பாத வலியை நீங்­கள் குறைத்­துக்­கொள்­ள­லாம்:

ஓய்­வெ­டுத்­தல்: வலி­யு­டைய பாதத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தா­மல் இருப்­பது நன்று. அதி­கம் நடப்­ப­தை­யும் ஓடு­வ­தை­யும் தவிர்ப்­பது நன்மை பயக்­கும்.

பனிக்­கட்டி ஒத்­த­டம்: வலி ஏற்­பட்ட முதல் 48 மணி நேரத்­தி­லி­ருந்து 72 மணி நேரம் வரை துணி­யில் சுற்­றப்­பட்ட பனிக்­கட்­டியை பத்து பதி­னைந்து நிமி­டங்­க­ளுக்கு வீக்­கத்­தின்­மீது வைக்­க­வேண்­டும்.

வீக்­கத்­தின் மீது அழுத்­தம்

அளித்­தல்: வீக்­கத்­திற்கு போடும் கட்­டுத்­து­ணி­யைப் பாதத்­தில் அணிந்­து­கொள்­ள­வேண்­டும்

படுத்­த­வாறு காலை தூக்கி

வைக்­க­வேண்­டும்:

வலி குறை­வ­தற்­கான மருந்து மற்­றும் இயன் மருத்துவ சிகிச்சையுடன் அதிர்­வலை மற்­றும் அல்ட்­ரா­ச­வுண்ட் சிகிச்­சையைப் பெற்றுக்கொண்டால் வலி ஓரிரு வாரங்­களில் குறைந்­து­வி­டும். அவ்­வாறு குறை­யா­வி­டில், மருத்­து­வரைச் சென்று பார்க்­கு­மாறு

பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!