முதியோருக்கு உதவிய காயல்பட்டினம் நலன் அபிவிருத்தி சங்கம்

சிங்கப்­பூ­ரில் காயல்­பட்­டி­னம் நல­ன் அபி­வி­ருத்தி சங்­கம் ஆற்றி வரும் சமூக நலப் பணி­க­ளின் ஓர் அங்­க­மாக, புனித ரம­லான் மாதத்தை முன்­னிட்டு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஓரறை வாடகை வீட்­டில் தனி­மை­யில் வசித்து வரும் முதி­யோரின் வீட்­டைச் சுத்­தம் செய்து வீடு முழு­வ­தும் சாயம் பூசி, புதுப் பொலி­வு­ட­னும் மகிழ்ச்­சி­யு­ட­னும் நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டாட புத்­தா­டை­களை அன்­ப­ளிப்­பாக வழங்கி சேவை­யாற்­றி­யுள்­ளது.

"ஈகைத் திரு­நா­ளா­கிய நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டா­ட­விருக்­கும் நாம், அன்­போ­டும் பரி­வோ­டும் ஈகை உள்­ளத்­து­டன் தனி­மை­யில் வசிக்­கும் முதி­யோ­ரை­யும் வச­திக் குறைந்­தோ­ரை­யும் அர­வ­ணைப்­ப­தன் மூலம் நாம் ஒன்­று­பட்ட சமூ­க­மா­கத் திக­ழ­மு­டி­யும்" என்று குறிப்­பிட்­டார் சங்­கத்­தின் தலை­வர் முஹம்­மது சர்­ஜூன். முதி­யோர் வீட்­டில் வர்­ணம் பூசி நற்­ப­ணி­கள் செய்­வ­தற்கு ஆத­ரவு வழங்­கிய சங்­கத்­தின் புர­வ­லர், மை டெக் இன்­ஜி­னி­ய­ரிங் கன்ஸ்ட்­ரக்­ஷன் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் அப்­துல் ரஹீம் அவர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார், சங்­கத்­தின் மதி­யு­ரை­ஞர் பாளை­யம் முஹம்­மது ஹசன்.

2004ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட காயல்­பட்­டி­னம் நல­ன­பி­வி­ருத்தி சங்­கம், கடந்த 18 ஆண்­டு­களாக கல்வி உப­கார நிதி, மருத்­துவ உதவி, நோன்­புத் துறப்பு நல்­லி­ணக்க நிகழ்ச்­சி­கள், உண­வுப் பொருட்­கள் நன்­கொடை, கருத்­த­ரங்­கு­கள், மாணவ மாண­வி­க­ளுக்­கா­ன போட்­டி­கள் உள்­ளிட்ட சமூ­க­ந­லப் பணி­களை ஆற்றி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!