இருமொழிக் கற்றலுக்கு ஒளிதரும் திறன்

மொழி­பெ­யர்ப்பு பற்றி தொடக்­கப்­பள்ளி தமிழ் ஆசி­ரி­யர்­கள் மேலும் கற்­றுக்­கொள்ள தொடர்பு தக­வல் அமைச்­சும் கல்வி அமைச்­சும் இணைந்து ஏற்­பாடு செய்த பயி­ல­ரங்கு சென்ற புதன்­கி­ழ­மை­யன்று மெய்­நி­க­ராக நடை­பெற்­றது.

பயி­ல­ரங்­கின் முதல் பகு­தி­யாக தொடர்பு தக­வல் அமைச்­சின் மொழி­பெ­யர்ப்­புப் பயிற்­று­விப்­பா­ளர் திரு ஆ. பழ­னி­யப்­பன் மொழி­

பெ­யர்ப்பு பற்­றிய பல தக­வல்­களைப் பகிர்ந்­து­கொண்­டார்.

மொழி­பெ­யர்ப்­பின் தேவை­கள், அதன் வர­லாறு, மொழி­பெ­யர்ப்­பில் அக­ரா­தி­யின் பங்­க­ளிப்பு ஆகிய கூறு­களை திரு பழ­னி­யப்­பன் விளக்­கி­னார்.

பயி­ல­ரங்­கின் அடுத்த அங்­க­மாக தமிழ் முரசு நாளி­த­ழி­ன் உதவி ஆசி­ரி­யர் திரு­மதி சுபா­ஷினி சிவா­னந்­த­னும் துணை செய்தி ஆசி­ரி­யர் திரு இர்­ஷாத் முஹம்­ம­துவும் செய்­தித்­து­றை­யில் மொழி­பெ­யர்ப்­பின் பங்கு பற்றி கருத்­து­ரைத்­த­னர்.

மொழி­பெ­யர்ப்புக்குத் தேவை­யான திறன்­களைப் பற்­றி­யும், அர்த்­தம் மாறா­மல் தக­வல்­களை அதே உணர்­வு­டன் வாச­கர்­க­ளி­டத்­தில் கொண்டு சேர்ப்­ப­தற்கு மொழி­

பெ­யர்ப்பைத் துல்­லி­ய­மாக செய்­ய­வேண்­டி­ய­தன் அவ­சி­யம் பற்­றி­யும் அவ்விருவரும் பகிர்ந்­து­கொண்­டனர்.

பள்ளிக்கூட ஆசி­ரி­யர்­கள் பயி­ல­ரங்­கில் கற்­றுக்­கொண்ட திறன்­களைப் பயன்­ப­டுத்திப் பார்க்க இரு அங்­கங்­க­ளி­லும் பயிற்சி நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன.

சூழ­லுக்கு ஏற்ப சரி­யான வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்­தி மொழி­பெ­யர்ப்புத் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்ள முதல் அங்­கத்­தில் சில ஆங்­கிலச் சொற்­களும் பழ­மொ­ழி­களும் ஆசி­ரி­யர்­க­ளுக்குக் கொடுக்­கப்­பட்­டன.

இதே­போல், இரண்­டாம் அங்­கத்­தில் ஆங்­கில செய்­தித்­தா­ளில் இடம்­பெற்ற கட்­டுரைத் தலைப்பு ஒன்றை தமி­ழில் மொழி­பெ­யர்த்துப் பார்க்­கும் வாய்ப்­பும் ஆசி­ரி­யர்­க­ளுக்குக் கிடைத்­ததன.

"இப்­ப­யி­ல­ரங்கு மிக­வும் பய­னுள்­ள­தாக அமைந்­தது. நான் இது­வரை ஓர் ஆங்­கில வார்த்­தைக்கு இணை­யான தமிழ்ச் சொல்லை கண்­டு­பி­டிக்­க­வேண்­டும் என்­றால் இணை­யத்­தையே நாடி வந்தேன்.

"ஆனால், இன்று நடைபெற்ற திரு பழ­னி­யப்­ப­னின் அங்­கத்­துக்குப் பிறகு துல்­லி­ய­மான மொழி­பெ­யர்ப்­புக்­காக அதிக அள­வில் அக­ரா­தியைப் பயன்­ப­டுத்­த முடிவு செய்து உள்ளேன்.

"அதே நேரம், மாண­வர்­க­ளின் தன்­மையைக் கருத்­தில்­கொண்டு அவர்­க­ளுக்குப் புரி­யும் விதத்­தில் மொழி­பெ­யர்ப்பு செய்­ய­வேண்­டி­யதைப் பற்­றி­யும் மேலும் தெரிந்­து­கொண்­டேன்," என்­றார் பாயலேபார் மெத்­த­டிஸ்ட் பெண்­கள் தொடக்­கப்­பள்­ளி­யின் தமிழ் ஆசி­ரியை திருமதி நூருல் வசிமா, 28.

"ஒரு மொழி­யி­லி­ருந்து மற்­றொரு மொழிக்கு மொழி­பெ­யர்க்கும்போது, அதை எந்த அளவுக்குச் சுருக்­க­மா­க­வும் தெளி­வா­க­வும் செய்­ய­ மு­டி­யுமோ அந்த அளவுக்குச் செய்­ய­வேண்­டும் என்று இப்­ப­யி­ல­ரங்­கி­லி­ருந்து நான் கற்­றுக்­கொண்­டேன்.

"அதே சம­யம், வார்த்­தை­க­ளின் பின்னணியை­யும் கருத்­தில்­கொள்­வது எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­றும் இப்­ப­யி­ல­ரங்கு சுட்­டிக்­காட்­டி­யது.

"இது­போன்ற பயி­ல­ரங்­கு­களில் ஆசி­ரி­யர்­க­ளுக்கு மேலும் சில பயிற்சி நட­வ­டிக்­கை­களை நடத்­தி­னால் நன்­றாக இருக்­கும்," என்­று தெரிவித்தார் புக்­கிட் தீமா தொடக்­கப் ­பள்­ளி­யின் தமிழ் ஆசி­ரி­யர் திரு ஜேசு­தாஸ் ஜோசஃப் பத்­ரோஸ், 40.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!