ஜப்பான் நீடித்த நிலைத்தன்மைமிக்க சமுதாயமாக மாறிய வரலாறு

உல­கின் மிக நீடித்த நிலைத்­தன்மை மிக்க சமு­தா­யங்­களில் ஒன்­றாக ஜப்­பான் மாறி­ய­தற்­கும் அதன் பண்­பாடு, பழக்­க­வ­ழக்­கங்­கள், கலை இலக்­கி­யம், தனித்­து­வ­மான வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்­கும் 400 ஆண்­டு­க­ளுக்கு முன் ஜப்­பா­னில் எடுக்­கப்­பட்ட கொள்­கை­தான் கார­ணம் என்று வர­லாற்று ஆசி­ரி­யர்­கள் கூறி­யுள்­ள­னர்.

'இடோ' என்று அழைக்­கப்­படும் ஆட்­சி­யின் கீழ், பல நூறாண்­டு­கால உள்­நாட்­டுப் போர்­க­ளுக்­குப் பிறகு அப்­போ­து­தான் ஜப்­பான் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டி­ருந்­தது.

பசி, பஞ்­சம், காடு­க­ளின் அழிப்பு, அள­வுக்கு அதி­க­மான மக்­கள் தொகை, வேளாண்­மை­யில் சரிவு என்று பல பிரச்­சி­னை­களை நாடு எதிர்­நோக்­கி­யது.

கடந்த 1603ஆம் ஆண்டு முதல் 1863 வரை ஜப்­பான் மேற்­கத்­தி­ய­ரின் வரு­கை­யைத் தடுக்க அதன் எல்­லை­களை மூடி, வெளி­நாட்­டி­னரை உள்ளே அனு­ம­திக்­க­வில்லை.

அந்த சுமார் முந்­நூறு ஆண்­டு­களில் இயற்­கைப் பாது­காப்­பில் கவ­னம் செலுத்­தப்­பட்­டது. அர­சாங்­கக் கொள்­கை­கள் பெரு­ம­ள­வில் மாறின.

இடோ ஆட்­சி­யில், மரங்­கள் வளர்க்­கப்­பட்டு காடு­கள் உரு­வாக்­கப்­பட்­டன. மன்­னர்­கள் தண்­ணீ­ரின் தரத்தை மேம்­ப­டுத்­தி­னர்.

வெளி­நாட்­டுப் பொருள்­கள் கிடைக்­கா­த­தால், நாட்­டில் இருந்த பொருள்­களை வைத்து உற்­பத்தி செய்ய வேண்­டி­யி­ருந்­தது. அத­னால் ஜப்­பா­னில் மறு­ப­ய­னீடு செய்­யும் கலா­சா­ரம் வளர்ந்­தது.

இடோ கால­கட்­டத்­தில் மக்­கள் பர­ப­ரப்­பற்ற, அமை­தி­யான வாழ்க்கை முறை­யைப் பின்­பற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

எரி­சக்தி, உணவு, வளங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான தேவையை ஜப்­பான் தானே நிறை­வேற்­றிக்­கொண்­டது. படிம எரி­பொ­ருள்­களும் ரசா­யன உரங்­களும் இல்­லாத பொரு­ளி­யல் அங்கு இயங்­கி­யது.

பொருள்­க­ளைப் பாது­காப்­ப­தை­யும் முடிந்­த­வரை குறை­வா­ன­வற்றை வீண­டிப்­ப­தை­யும் ஜப்­பா­னி­யர்­கள் பழக்­க­மாக்­கிக் கொண்­ட­னர்.

மக்­கள் ஆடை­கள் கந்­த­லா­கும்­வரை அவற்றை மீண்­டும் மீண்­டும் தைத்து அணிந்­து­கொண்­ட­னர்.

எல்­லாம் மறு­ப­ய­னீடு செய்­யப்­பட்­டது. வீடு­க­ளைப் பெயர்த்து எடுத்து வேறு இடங்­களில் அமைக்­கும் தொழில்­நுட்­பம் கடை­ப்பி­டிக்­கப்­பட்­டது.

மனி­தக் கழி­வு­களும் உடல்­களை எரித்த சாம்­ப­லும் உரங்­க­ளா­கப் பயன்­பட்­டன. இது மற்ற சமூ­கங்­களில் காணப்­பட்­டா­லும், தொழில்­மு­னைப்பு மிக்க ஜப்­பா­னி­யர்­கள் இதை வர்த்­த­க­மாக மாற்­றி­னர். கழி­வு­க­ளை­யும் சாம்­பலையும் விற்­கும் தொழில் தழைத்­தது.

இத­னால் வேளாண்மை பெரு­கி­யது. கழி­வு­கள் குறைந்­த­தால் சுத்­த­மும் சுகா­தா­ர­மும் பெரு­கி­யது. மக்களின் வாழ்க்கை செழிப்பானது.

பருத்தி, எண்­ணெய், காகி­தம் போன்­ற­வற்­றின் உற்­பத்தி, பட்­டுப் புழுக்­களை வளர்த்­தல் போன்ற உள்­ளூர் தொழில்­கள் வளர்ந்து ஜப்­பா­னுக்கு இன்­றும் தனித்த அடை­யா­ளத்­தைத் தரு­கின்­றன.

இடோ காலத்­தில் நேரத்­தைப் பிரித்து கணக்­கி­டும் முறை மாற்­றப்­பட்­டது. கதி­ர­வன் தோன்­றி­ய­தும் வேலை­க­ளைத் தொடங்கி அது மறைந்­த­தும் அவற்றை முடித்­துக் கொண்­ட­னர்.

ஆலய மணி அடிப்­பதை வைத்து மக்­கள் நேரத்­தைக் கணித்­த­னர்.

இத­னால் தமி­ழர்­க­ளைப் போல பரு­வ­கா­லங்­க­ளுக்கு ஏற்ற வாழ்க்­கை­யும் அதற்­கேற்ற பண்­பா­டும் பழக்­க­வ­ழக்­கங்­களும் உரு­வா­யின.

கட்­டா­யத்­தால் உண்­டான பண்­டைய முறையில் பல குறைபாடுகள் இருந்தன. ஆனாலும் இந்த மறு­ப­ய­னீட்டு வாழ்க்கை முறை­யி­லி­ருந்து உல­கம் இன்­று நாம் பாடம் கற்று ஒழுக வேண்­டும் என்று ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!