சுற்றுப் பயணம்: கொவிட்-19க்கு முன்னும் பின்னும்

கருணாநிதி துர்கா

உலக நாடு­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­திய பிறகு சுற்­றுப்­ப­ய­ணத் துறை மீண்­டும் சூடு பிடித்­துள்­ளது. ஆனால் பயண அனு­ப­வங்­களில் மாற்­றங்­க­ளைக் காண­மு­டி­வ­தா­கக் கூறு­கின்­ற­னர் சுற்­றுப்­ப­ய­ணி­கள்.

தொற்­று­நோய்க்கு முன்­னர் சுவிட்­சர்­லாந்து, ஜெர்­மனி, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட பல நாடு­க­ளுக்கு பய­ணம் செய்­த­வர் பாஸ்­க­ரன் ஜெய­சு­ப­ஸ்ரீ. அண்­மை­யில் இவர் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இந்­தி­யா­விற்­கும் சென்­று­வந்­தார்.

சுற்­று­லாத் தலங்­களில் கூட்­டம் குறைந்­தி­ருப்­ப­தா­கக் கூறிய இவர் சுற்­றுப்­ப­ய­ணி­கள் மூல­மாக தொற்­று­நோய் பர­வக்­கூ­டும் என்ற அச்­சம் அங்­குள்ள மக்­க­ளி­டையே பர­வ­லாக இருக்­கிறது என்­கி­றார். பய­ணச்­சீட்­டு­க­ளின் விலை உயர்ந்­தி­ருப்­பதை இவர் குறிப்­பிட்­டார்.

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க கோயில்­க­ளுக்­குச் செல்­வ­தி­லும் இந்­திய உணவு வகை­க­ளைச் சுவைத்­துப் பார்ப்­ப­தி­லும் ஆர்­வம் காட்­டும் மது­மிதா திருப்­பதி, இந்­தி­யா­வின் மதுரை, கோவில்­பட்டி, ராமேஸ்­வ­ரம் போன்ற இடங்­களுக்குச் சென்­று­வந்­தார்.

நோய்ப் பர­வ­லுக்கு முன்­னும் பின்­னும் இந்­தியா சென்ற இவர் பெரி­தாக எந்த மாற்­றத்­தை­யும் காண­வில்லை என்­றார். ஆறு மாதங்­க­ளுக்கு முன்­னரே பய­ணச்­சீட்­டு­களை முன்­ப­திவு செய்­த­தால் கூடு­தல் செலவு இல்லை.

இருப்­பி­னும் கோலா­லம்­பூர் சென்­ற­போது தடுப்­பூசி விவ­ரங்­களைப் பதி­வு­செய்­யும் முறை பய­ணி­க­ளுக்­குக் குழப்­ப­மாக இருந்­ததை உணர முடிந்­த­தா­கக் கூறி­னார் இவர்.

பய­ணம் செய்­வ­தில் ஆர்­வம்­கொண்ட தி. சக்தி நிவாஸ், நோய்ப் பர­வ­லுக்­கு­முன் கம்­போ­டியா உள்­ளிட்ட தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள், துபாய், சீனா போன்­ற­வற்­றுக்குப் பய­ணம் செய்ததுண்டு.

கடந்த ஈராண்­டு­களில் தென்­கொ­ரியா, ஆஸ்­தி­ரே­லியா, மலே­சியா ஆகியவற்றுக்குச் சென்­ற­துடன் நெடுந்­தொ­லைவு நடைப்­பயணங்­களும் மேற்­கொண்­டார்.

தென்­கொ­ரியா போன்ற நாடு­களில் மொழி ஒரு தடை­யாக அமைந்­த­தால் அங்­குள்­ள­வர்­க­ளி­டம் பெரும்­பா­லும் மொழி­பெ­யர்ப்புச் செய­லி­கள் மூலம் உரை­யா­டி­னார். பய­ணக் காப்­பீடு, சுகா­தா­ரப் பரி­சோ­த­னை ஆகியவற்றுக்கு அதி­கம் செல­வா­ன­தாகக் கூறி­னார்.

அண்மையில் பயணக் காப்­பு­றுதி வாங்­கு­வோ­ரின் எண்­ணிக்கை ஏறக்குறைய 25 முதல் 30 விழுக்­காடு வரை அதி­க­ரித்­துள்­ள­தாக நிதி ஆலோ­ச­கர் ஹபிடா ஷா கூறி­னார்.

கிருமிப் பரவலுக்கு முன்­பு பல நாடு­க­ளுக்குப் பயணம் சென்ற அனுபவம் கவி­லாஷா குமா­ர­சாமிக்கு உண்டு. அதே நாடு­களில் தற்போது முகக்­க­வ­சம் அணி­தல், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளு­தல் போன்ற விதிமுறைகள் நடப்பில் இருப்பதை இவர் சுட்டினார்.

அண்மையில் மலே­சி­யா­வுக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நகருக்கும் சென்ற இவர் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளின்­போது நோய்த்தொற்று ஏற்­ப­டக்­கூ­டும் எனப் பெரிதும் அஞ்சியதாகச் சொன்­னார்.

நோய்ப் பர­வ­லுக்­குப் பின்­னர் தனி­யாக லண்­டன் சென்ற அலீனா சஜ­னுக்­கும் அச்­சம் இருந்­தது. அங்கு முகக்­க­வ­சம் கட்டாயம் இல்லை. இருப்­பி­னும், நோய்ப் பர­வ­லுக்­குப் பின் சுகா­தா­ரத்­திற்­கும் கூட்ட நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கும் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது என்­றார் இவர்.

கூடிய விரை­வில் இந்­தி­யா செல்லவிருக்கும் மஹிமா இளங்கோ, இனி தொற்றுநோய் அறி­கு­றிக்­கான பரிசோத­னையை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்றார்்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!