ஆங்கிலம் பேசும் உலகில் ஜப்பானிய படைப்புகளைப் புகுத்துவதில் சவால்கள்

ஜப்பானிய காணொளி விளையாட்டுகளின் அனைத்துலக மறுபதிப்புகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகின்றன.

அதனால், அனைத்துலகப் பயனீட்டாளர்களின் விருப்புவெறுப்புகளைப் புரிந்துகொண்டு, விளையாட்டுகளை உருவாக்கும் கட்டாயத்திற்கு ஜப்பானிலுள்ள வடிவமைப்பாளர்கள் ஆளாகி வருகின்றனர்.

1980களில் வெளிவந்த ‘வைல்டு வெஸ்ட்டு’ விளையாட்டு முதல் தொடங்கியது இந்த நீண்ட, சிக்கலான செயல்முறையான ‘உள்ளூர்மயமாக்கல் முறை’ என இத்தகைய விளையாட்டுகளைப் பிற நாடுகளுக்காக மொழிபெயர்க்கும் குழு ஒன்று, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

‘உள்ளூர்மயமாக்கல் முறை’ என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டைச் சேர்ந்த படைப்பை, பிற நாடுகள் அல்லது வேறு கலாசாரம் கொண்ட சமுதாயத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதாகும்.

ஜப்பானிய கேலிச்சித்திரம், உயிரோவியம், காணொளி விளையாட்டு போன்றவற்றுக்கு இந்த முறை தொடங்கப்பட்ட காலகட்டத்தில், விதிமுறைகளோ தொழில்துறைத் தரநிலைகளோ இல்லை. ஒரு விளையாட்டுக்கான மொழிபெயர்ப்பு, மற்றொரு விளையாட்டிலிருந்து கணிசமாக மாறுபடும் என்றது ‘சேகா ஆஃப் அமெரிக்கா’ குழு.

சில நேரங்களில் விளையாட்டு மாந்தர்களின் வசனங்களை எழுதுவதற்கான விளையாட்டுத் திரையில் போதிய இடம் மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தரப்படாது. சில நேரங்களில் போதிய மொழித்திறன் இல்லாமல் விளையாட்டு வடிவமைப்பாளர்களே ஜப்பானிலிருந்து ஆங்கிலத்திற்குத் தாமாக மொழிபெயர்ப்பைச் செய்துவிடுவர்.

இதனால், அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பல விளையாட்டுகள் ஜப்பானுக்கு வெளியே விற்பனை ஆவதில்லை. இப்போது இந்தத் துறையும், முக்கியமாகப் பயனாளர்களும் வெகுவாக மாறியுள்ளதாக விளையாட்டை உள்ளூர்மயப்படுத்துவோர் கூறுகின்றனர்.

அந்த விளையாட்டுகளின் கலாசார, உணர்வு சார்ந்த உட்கூறுகளை மேலும் துல்லியமாக மொழிபெயர்க்க இன்றைய காலகட்டத்தில் முடிகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

‘மங்கா’ ஓவியர். படம்: ஏஎஃப்பி

ஜப்பானிய விளையாட்டு வடிவமைப்பில் இப்போது உள்ளூர்மயப்படுத்தல், அதாவது பிற நாடுகளுக்குப் பொருந்தக்கூடிய முறையில் வடிமைப்பது முக்கியப் படிமுறையாக, வடிவமைப்பின் தொடக்கத்திலிருந்தே கருத்தில் கொள்ளப்படுகிறது. இதில் மொழியியல் சவால்கள் மட்டுமின்றி, பண்பாட்டுச் சவாலும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சான்றாக, ‘மீ டூ’ சர்ச்சை போன்றவற்றால் பெண்களின் மானத்திற்குப் பெருமதிப்பு தரும் கலாசாரங்களில், பெண் கதாபாத்திரங்களின் உடைகள் பாந்தத்துடன் வடிவமைக்கப்படுவதாக ஜப்பானிய விளையாட்டுப் பெருநிறுவனம் ‘பாண்டாய் நாம்கோ’வின் உள்ளூர்மயப்படுத்தல் பிரிவின் தலைவர் பிராங்க் கென்டி தெரிவித்தார்.

‘மங்கா’ கேலிச்சித்திரங்கள், ‘எனிமே’ உயிரோவியங்கள் போன்றவற்றாலும் ஜப்பானியப் பண்பாடு மீதான பொதுவான அனைத்துலக ஆர்வத்தாலும் ஜப்பானிய மொழிபெயர்ப்பு எளிதாகிவிட்டது. “உலகத்தார் காலப்போக்கில் ஜப்பானிய கலாசாரக் கூறுகளைப் பற்றி அதிகம் அறிந்துள்ள நிலையில் மொழிபெயர்ப்பும் எளிதாகிறது,” என்று திரு கென்டி கூறினார்.

‘ராமென்’ என்ற ஜப்பானிய உணவை இப்போது நூடல்ஸ் என மொழிபெயர்க்கத் தேவையில்லை. ஏனெனில், உலகத்தினருக்கு ராமெனைப் பற்றித் தெரியும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!