சுடச் சுடச் செய்திகள்

ஆட்கொல்லி முதலை சுட்டு வீழ்த்தப்பட்டது

வடக்கு சரவாக்கின் உலு சுவாய் மாவட்டத்தில் உள்ள தோட்டம் ஒன்றின் ஊடாகச் செல்லும் ஆற்றில் 4.2 மீட்டர் நீள முதலை ஒன்று நேற்று (டிசம்பர் 6) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

மலேசியாவின் ‘எஸ்எஃப்சி’ எனப்படும் சரவாக் ஃபாரஸ்ட்ரி வனவிலங்கு நடவடிக்கைக் குழுவானது போலிசார் மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் அந்த முதலையை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்தது.

அதன் வயிற்றுக்குள் மனித எலும்புகள், உடைகள் போன்ற எஞ்சிய பொருள்கள் காணப்பட்டன.  

அந்தத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த இந்தோனீசிய தோட்டத் தொழிலாளியான 33 வயது அப்துல் சிடுஜு என்பவரின் உடைதான் முதலையின் வயிற்றுக்குள் இருந்தது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 

ஆற்றோரத்தில் காய்கறிகளைச் சேகரித்துக்கொண்டிருந்த அப்துல் காணாமல்போனதாகக் கூறப்பட்டது.

மிரி, பின்டுலு பகுதிகளுக்கு இடையிலான அந்த ஆற்றின் கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி இந்த முதலையைத் தேடும் பணி தொடங்கியது.

அந்தப் பகுதியில் இருந்த சகதியில் முதலையைக் கண்டதாக கிராமவாசிகள் புகார் அளித்ததையடுத்து  ‘எஸ்எஃப்சி’யின் உதவி நாடப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon