மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 1.42 டன் போதைப்பொருள் பிடிபட்டது

மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்ததாக நம்பப்படும் 1.42 டன் எடையுள்ள ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை தாய்லாந்து அதிகாரிகள் நேற்று (ஜூலை 2) பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 39 மில்லியன் ரிங்கிட் (S$12.7 மில்லியன்) எனக் கூறப்படுகிறது.

தாய்லாந்தின் நாகோன் சி தம்மராட் பகுதியில் இரண்டு தாய்லாந்து நாட்டவர் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேங்காக்கிலிருந்து, தாய்லாந்து - மலேசியா எல்லைப் பகுதியில் இருக்கும் டாக் பாய்க்கு இரும்புப் பாளங்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனத்தில் 35 பைகளுக்குள் அந்த போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாக் பாயிலிருந்து மலேசியாவுக்குள் அதனைக் கடத்திச் செல்லும் நபரிடம் இந்த போதைப்பொருளை அவ்விருவரும் ஒப்படைக்க இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online