ஊழியர் பற்றாக்குறை; முன்னாள் போதைப் புழங்கிகள், கைதிகளை பயன்படுத்த முடிவு

மலே­சி­யா­வில் முழுக்க முழுக்க ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் செம்­பனை எண்­ணெய் நிறு­வ­னங்­கள் கொரோனா கிரு­மிப் பர­வ­லால் கடு­மை­யான ஆள் பற்­றாக்­கு­றை­யைச் சந்­தித்து வரு­கின்­றன.

உல­க­ள­வில் இரண்­டா­வது பெரும் செம்­ப­னைத் தோட்­டத் தொழி­லைக் கொண்ட மலே­சியாவின் செம்­பனை எண்­ணெய் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பல அண்­மை­யில் ஆள் நிய­மன முயற்­சி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டன. செம்­ப­னைத் தோட்­டங்­களில் உர­மி­டு­தல் முதல் அறு­வடை செய்­வது வரை­யி­லான பல­த­ரப்­பட்ட வேலை­க­ளுக்கு உள்­ளூர்­வா­சிகளை நிய­மிக்க விளம்­ப­ரங்­கள் செய்­யப்­பட்­டன.

ஆயி­னும் அதற்­கான வர­வேற்பு மிக­வும் மந்­த­மாக இருந்­தது. தோட்­டத் தொழிலை செய்ய பல­ரும் முன்­ வ­ர­வில்லை. செம்­ப­னைத் தோட்ட மொத்த ஊழி­யர்­களில் சுமார் 85 விழுக்­காட்­டி­னர் இந்­தோ­னீ­சியா மற்­றும் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்­த­வர்­கள். ஆபத்­தா­னது, கடி­ன­மா­னது, அழுக்­கு ­ப­டக்­கூ­டி­யது என்ற கார­ணங்­க­ளால் உள்­ளூர்­வா­சி­கள் பெரும்­ பா­லும் இவ்வேலை­க்கு வருவதில்லை.

கொரோனா பர­வ­லுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட பய­ணக் கட்­டுப்­பாடு­ களும் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களும் சுமார் 37,000 ஊழி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­கு­றையை ஏற்­ப­டுத்­தி­விட்­டன. இது அந்­தத் தொழி­லின் மொத்த ஊழி­ய­ர­ணி­யில் கிட்­டத்­தட்ட பத்து விழுக்­காடு. ஒவ்­வோர் ஆண்­டும் செப்­டம்­பர் தொடங்கி நவம்­பர் வரை செம்­பனை பரு­வ­கா­லம். இப்­ப­ரு­வத்­தைத் தப்­ப­விட்­டால் உற்­பத்தி மோச­ம­டை­யும். அது இத்­தொ­ழி­லில் முதன்­மை­யாக விளங்­கும் இந்­தோ­னீ­சி­யா­வி­டம் வர்த்­தக வாய்ப்­பு­க­ளைப் பறி­கொடுக்­கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­வி­டும். தற்­போது வரை இந்­தோ­னீ­சி­யா­வில் இத்­தொ­ழி­லுக்கு ஆள் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­வில்லை.

ஏற்­கெ­னவே கிரு­மிப் பர­வ­லால் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யும் தாம­த­மான அறு­வ­டை­யும் இத்­தொ­ழி­லில் சுமார் 30 விழுக்­காடு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக மலே­சிய செம்­பனை எண்­ணெய் உற்­பத்­தி­யா­ளர் சங்­கம் மதிப்­பிட்டு உள்­ளது.

மேலும் கடந்த ஆண்டு உற்­பத்தி செய்­யப்­பட்ட 19.90 மில்­லி­யன் செம்­பனை கச்சா எண்­ணெய் அள­வைக் காட்­டி­லும் உற்­பத்தி பெரிய அள­வில் வீழ்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனவே செம்­ப­னைத் தொழி­லுக்கு போதைப் புழங்­கி­யாக இருந்து மீண்­ட­வர்­க­ளை­யும் சிறைக்­கை­தி­க­ளை­யும் ஈடு­ப­டுத்த முடிவு செய்­துள்­ள­தாக சங்­கம் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மலே­சிய போதைப்­பொ­ருள் தடுப்­புச் சங்­கத்­தை­யும் சிறைத் துறை­யை­யும் தாங்­கள் நாடி­யி­ருப்­ப­தா­க­வும் அறிக்கை கூறி­யது.

கிருமிப் பரவலால் மலேசியாவின் செம்பனைத் தோட்டத் தொழிலில் கடும் ஆள் பற்றாக்குறை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!