வெளிநாட்டு ஊழியர் தங்குமிட வசதிகளை மேம்படுத்த முதலாளிகளுக்கு வலியுறுத்து

சிலாங்­கூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பர­வி­ய­தால் அவர்­கள் தங்­கு­மி­டங்­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அர­சாங்­கம் அமல்­ப­டுத்தி வரு­கிறது.

இந்த நிலை­யில் ஊழி­யர் தங்­கு ­மி­டங்­களில் போது­மான வச­தி­களை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று முத­லா­ளி­களை அரசு வலி­யு­றுத்தி யுள்ளது.

நாட்­டுக்­குள் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே அவர்­க­ளுக்­குத் தேவை­யான வச­தி­களை தயா­ராக வைத்­தி­ருக்க வேண்­டும் என்று பாது­காப்­புக்­கான மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

குறைந்­த­பட்ச வீட்டு வச­தி­களை உறு­திப்­ப­டுத்­தும் 1990ஆம் ஆண்­டின் சட்­டத்தை முத­லா­ளி­கள் அனை­வ­ரும் கட்­டா­ய­மாக பின்­பற்ற வேண்­டும் என்­றார் அவர்.

“கடந்த காலங்­களில் அங்­கு­மிங்­கு­மாக சிலர் மட்­டும் சட்­டத்­தைப் பின்­பற்­றி­னர். ஆனால் சில வாரங்­க­ளுக்கு முன்பு கையு­றை ­க­ளைத் தயா­ரிக்­கும் உல­கின் முன்­னணி நிறு­வ­ன­மான ‘டாப் குளோவ்’ தொழிற்­சா­லை­களில் ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பர­வி­ய­தால் அரசு கட்­டுப்­பா­டு­களை கடு­மை­யாக்­கி­யி­ருக்­கிறது,” என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே தடுப்­பூ­சி­க்கு அனு­மதி வழங்­கு­வ­தில் பொறுமையு டன் முடிவு எடுக்கப்படும் என்று மலே­சியா கூறியுள்ளது.

பிரிட்­ட­னில் ஃபசைர்-பயோன்­டெக் தடுப்­பூ­சி­களை அடுத்த வாரத்­தி­லி­ருந்து பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க அனு­மதி வழங்­கப்­பட்டு ­உள்­ளது.

இதனை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப் போவ­தாக மலேசிய சுகா­தார தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!