'மலேசியாவில் பிப்ரவரியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்'

மலேசியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி போடுவது தொடங்கும். மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு போடுவதற்குத் தேவையான அளவுக்கு தடுப்பு மருந்துகளை அரசாங்கம் வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருவிக்கப்படும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது, திறன் மிகுந்தது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் குழுவினரில் தாமும் ஒருவர் என இன்று திரு முகைதீன் தம் தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியில் 6.4 மில்லியன் டோஸ்கள் வாங்கவும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினருக்கு போடத் தேவையான அளவு.

ஃபைசர் நிறுவனத் தடுப்பூசிகளில் 12.8 மில்லியன் டோஸ்கள் வாங்க கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்றொரு 10 விழுக்காட்டினருக்கு கோவேக்ஸ் தடுப்பு மருந்து பெறப்பட உள்ளது.

சீனாவின் சினோவேக், கேன்சினோ ரஷ்யாவின் கேமலியா கழகத்தின் தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தருவிக்க மலேசியா கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 80% அதாவது 26.5 மில்லியன் மக்களுக்கு போடத் தேவையான அளவுக்கு தடுப்பு மருந்தில் 2.05 பில்லியன் ரிங்கிட் (S$675 மில்லியன்) செலவில் வாங்குவதையும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!