மலேசியா: நீண்ட காலத்துக்கு நடமாட்ட கட்டுப்பாடு இராது

மலே­சி­யா­வில் இப்­போது நடப்­பில் இருக்­கும் மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு முடி­வ­டைந்­து­வி­டும் என்று சுகா­தார அமைச்சு கோடி­காட்டி இருக்­கிறது.

இப்­போது அமலில் இருக்­கும் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வைத் தொடர்ந்து நிபந்­த­னை­யு­டன் கூடிய மூன்று மாத நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நடப்­புக்கு வரும்.

அத்­த­கைய கட்­டுப்­பாடு கார­ண­மாக மக்­கள் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் அதை இன்­னும் நீண்­ட­கா­லத்­துக்கு அமல்­படுத்­தும் எண்­ணம் அர­சாங்­கத்­தி­டம் இல்லை என்று சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார்.

மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டை நீண்­ட­கா­லத்­துக்கு நீட்­டிக்க நாம் விரும்­ப­வில்லை என்­றார் அவர்.

அந்­தக் கட்­டுப்­பாட்டை பிப்­ர­வரி தொடக்­கம் வரை நான்கு வார காலத்­திற்கு நீட்­டித்து, பிறகு நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாடு மூன்று மாதங்­க­ளுக்கு அமல்­ப­டுத்­தி­னால் கொவிட்-19 தொற்­று­வோ­ரின் எண்­ணிக்­கையை ஈரி­லக்க அள­விற்கு குறைத்­து­வி­ட­லாம் என்று நம்­பப்­ப­டு­வ­தாக நேற்று நடந்த மெய்­நி­கர் செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் இப்­போது சரவாக் நீங்­க­லாக எல்லா மாநிலங்­க­ளி­லும் மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நடப்­பில் இருக்­கிறது. இது பிப்­ர­வரி 4ஆம் தேதி வரை அம­லில் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!