டாக்டர் மகாதீர் முகமதுக்கு இதயநோய் நிலையத்தில் சிகிச்சை

மலேசியாவின் முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்கு விருப்பத் தெரிவின் பேரில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சிகிச்சை திட்டமிட்டபடி நடந்ததாக தேசிய இதய நோய் சிகிச்சை நிலையம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) அன்று தெரிவித்தது.

சிகிச்சைக்குப் பின்னர் டாக்டர் மகாதீர் நன்கு குணமடைந்து வருவதாகவும் நிலையம் சொன்னது.

அவர் அடுத்த சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அது கூறியது.

அவர் துடிப்புடன் இருப்பதாகவும் நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

96 வயது டாக்டர் மகாதீர் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய இதய நோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர் மகாதீருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை என்னவென்று நிலையம் விவரம் தரவில்லை.

கடந்த டிசம்பரில் நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அவர்மீது மேற்கொள்ளப்பட்டன.

இதயநோய் பிரச்சினை உள்ள டாக்டர் மகாதீருக்கு முன்னதாக மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!