சென்னை பெசன்ட் நகரில் கரை ஒதுங்கிய டால்ஃபின்

­­­ஆ­லந்­தூர்: சென்னைப் பெசன்ட் நகர் கட­ல் பகு­தி­யில் நேற்று பிற்­ப­கல் சுமார் ஐந்தரை அடி நீள­முள்ள டால்­ஃபின் கரை ஒதுங்­கி­யது. மூக்­கில் காயத்­து­டன் அந்த டால்­ஃபின் உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்­டி­ருந்தது. இது குறித்­துக் கிண்டி வனத்­துறை அதி­கா­ரி­களுக்கு அப்­ப­குதி மீன­வர்­கள் தக­வல் அளித்­த­னர். உடனே வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து டால்­ஃ­பினை பார்வை­யிட்­ட­னர். பின்னர் கடல்­வாழ் உயி­ரின மருத்­து­வர் பால் பேட்­ரிக் அங்கு வர­வழைக்­கப்­பட்­டார். அவர் காயம் அடைந்த டால்­ஃ­பி­னுக்கு உட­ன­டி­யாக சிகிச்சை அளித்­தார். இதை­ய­டுத்து அந்த டால்­ ஃ­பினை மீன­வர்­கள் உத­வி­யு­டன் வனத்­துறை­யி­னர் ஒரு பட­கில் ஏற்­றிச் சென்று நடுக்­க­ட­லில் நேற்று முன்­தி­னம் மதிய வேளை­யில் கொண்டு போய் விட்­ட­னர்.

இது­பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகை­யில், டால் ­ஃ­பின்கள் ஒன்­றோடு ஒன்று சண்டை­யிட்­டுக் கொண்ட­தில் அந்த டால்­ஃபின் காயம் அடைந்து கரை ஒதுங்கி இருக்­க­லாம். அல்லது கட­லுக்­குள் ஏதா­வது கூர்மை­யான பொரு­ளு­டன் மோதி­ய­தால் இந்தக் காயம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று அவர் கூறினார். நான்கு வயது மதிக்­கத்­தக்க அந்த டால்­ஃ­பின் 40 கிலோ எடை­ இருந்த­தாக வனத்­துறை அதி­காரி டேவிட் ராஜ் தெரி­வித்­தார். நடுக் ­க­ட­லில் டால்­ஃபினை விட்­ட­தும் அது மகிழ்ச்­சி­யு­ட­னும் புதிய தெம்­பு­ட­னும் துள்­ளிக் குதித்­த­தாக அவர் கூறினார். ஆண்­டு­தோ­றும் இப்­ப­கு­தி­யில் ஒரு டால்­ஃபினா­வது கரை­ ஒதுங்­கு­வது வழக்­கம். ஆனால் இது­வரை அவற்­றில் ஒன்­றும் பிழைத்­த­தில்லை. முதல்­முறை­யாக இந்த அதிர்ஷ்­ட­மான டால்­ஃ­பின் உயி­ரு­டன் நடுக்­க­ட­லுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என்­கிறார் அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்.

சென்னை பெசன்ட் நகரின் கடல் கரையோரப் பகுதியில் நீந்த முடியாமல் தத்தளித்து ஒதுங்கிய டால்ஃபினை அந்தப் பகுதி இளையர்கள் காப்பாற்றினர். உயிருக்குப் போராடிய அந்த டால்பினின் மூக்கில் காயம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. படம்: தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!