கூட்டணிக்கு அதிமுக விடுத்த ரகசிய அழைப்பு: தடுமாறும் திருமா, வைகோ

சென்னை: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிமுக தலைமை ரகசிய அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியானது முதல் தமிழக அரசியல் களத்தில் சூடு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தியை உறுதிச் செய்யும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்மைய பேட்டி ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுகவுடன் தமக்கு நல்லுறவு இருப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், தாம் நினைத்தால் அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கும் போக முடியும் என்று தெரிவித்துள்ளார். "எனினும் இப்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் நலக் கூட் டணியிலேயே நாங்கள் தொடர்கி றோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் உருவாக்கினோம். ஆகையால் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை," என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளால் காங்கிரசு, பாஜக, பாமக இருக்கும் கூட்டணிக்குப் போக முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுகவையும் அதிமுகவைவும் விமர்சிப்பது தனது அரசியல் பாணி என்று தெரிவித்துள்ளார். அதிமுக, திமுகவுக்கு மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ளதாக மக்கள் நலக் கூட்டணித் தலை வர்கள் தொடர்ந்து கூறி வருகின் றனர். இந்நிலையில், அவ்விரு கட்சிகளுடனும் தமக்கு நல்லுறவு நீடிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். இதனால் மக்கள் நலக் கூட்ட ணியில் உள்ள பிற தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!