தமிழவேளும் தமிழ் முரசும்

லதா

சிங்கப்­பூர் ஒரு குடி­யேற்ற நாடு. பல நாட்டு மக்கள் குடி­யே­றிய நாடு. அவர்­களுள் இந்­தி­யர்­களும் அதிகம். இங்கு குடி­யே­றிய இந்­தி­யர்­கள், மொழி கலா­சா­ரத்­து­டன் இங்கேயே நிலைத்­தி­ருக்க வேண் டும் என்­ப­தற்­காக தமது வாழ்வை அர்ப்­ப­ணித்­த­வர் அத்­தகைய குடி­யே­றிகளில் ஒரு­வ­ரான கோ.சாரங்க­பாணி. அதற்­காக அவர் தொடங்­கி­ய­து­தான் தமிழ் முரசு நாளிதழ். 1930களில் இருந்து 1974ல் உயிர்நீக்கும் வரையில் 40 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபட்ட தமி­ழ­வேள் கோ.சாரங்க­பா­ணியை­யும் அவர் தோற்­று­வித்த தமிழ் முரசை­யும் பற்றி இன்றைய பார்வை­யில் எழு­தி­யி­ருக்­கிறார் ஊட­க­வி­ய­லா­ரும் ஆய்­வா­ள­ரு­மான திரு பால­பாஸ்­க­ரன்.

சமூ­கத்­தோடு நெருங்­கிய உறவு கொண்­டி­ருந்த ஒரே தலை­வ­ரான கோ.சாரங்க­பாணி வாய்ப்பு வச­தி­யற்ற தமி­ழர்­களின் முன்­னேற்­றத்­துக்­கா­கவே பாடு­பட்­டார். அதற்­கா­கவே தமிழ் முரசும் பாடு­பட்­டது. முரசைத் துணை­யா­கக் கொண்டு தமிழ்ச் சமூ­கத்­தின் நட­ வ­டிக்கை­களைச் சாரங்கபாணி எப்படி முன்­னெ­ டுத்­தார் என்பதே தமது புத்­த­கத்­தின் சாரம் எனக் கூறினார் திரு பால­பாஸ்­க­ரன். "இதுவரை யாரும் அறியாத ஏரா­ள­மான தக­வல்­கள் உண்டு. அவற்றைத் தேடித் தேடித் தொகுத் தி­ருக்­கி­றேன். இது பல வருட உழைப்­பின் பயன்," என்ற அவர், சாரங்க­பா­ணியைப் பற்றிய ஒரு முழுமை­யான கண்­ணோட்­டத்­தில் வந்­தி­ருக்­கும் நூல் என்று இதனைக் குறிப்­பி­ட­லாம் என்றார்.

1950களில் பல ஆயிரம் பேர் சிங்கப்­பூர்க் குடி ­யு­ரிமை பெற வழி­வ­குத்­த­வர் கோ.சா. தமிழர் சீர்­ தி­ருத்­தச் சங்கம், தமிழர் பிர­தி­நி­தித்­துவ மன்றம், தமிழர் திருநாள் ஆகி­ய­வற்­றின் பிதா­ம­கன் அவர். தமிழ்க் கல்­வி­யின் முன்­னேற்­றத்­துக்­கும் மலாயாப் பல்­கலை­யில் இந்­தி­யத் துறை நிலைத்து நிற்­ப­தற்­கும் தமிழ்ச் சமூ­கத்­தின் உதவியைத் திரட்­டி­ய­வர் அவர். சாரங்க­பா­ணி­யின் பொது­வாழ்க்கை­யில் களங்கம் காண முடியாது என்றா­லும் அவர் தமிழ்ச் சமூ­கத்­தின் நன்மைக்­காக நடத்­திய தமிழ் முரசை இடைக்­கா­லத்தில் நிறுத்­தி­யி­ருக்­கக்­கூ­டாது. சமூக அக்கறை என்ன ஆயிற்று என்ற கேள்­விக்கு அது இடம் தந்­து­விட்­டது என்று எழு­தி­யி­ருக்­கும் நூலா­சி­ரி­யர், கோ.சா குடும்பத்தை விட்டு முரசு கைநழுவி எஸ்பிஎச் நிறு­வ­னத்­துக்குக் கைமா­றி­ய வரலாற்றையும் திரும்­பிப் பார்க்­கிறார்.

"சிங்கப்­பூ­ரின் 200 ஆண்டுத் தமிழர் வரலாற்றில் குறிப்பிடப்பட ­வேண்­டி­ய­வர்­களில் முதன்மை­யா­ன­வர் கோ.சா. அவர் ஒரு தனி­ம­னி­தர் என்றா­லும் அவ­ருடைய வாழ்க்கை பொது வாழ்க்கை­யா­கவே அமைந்­து­விட்­டது. வரலாறு எழுத வருவோரை இன்னும் வசி­யப்­படுத்­திக்­கொண்­டி­ருக்­கும் மாம­னி­தர் அவர்," என்றார் திரு பால­பாஸ்­க­ரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!