கர்ப்பிணி மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தவருக்கு $3,500 அபராதம்

இரவு விடுதிக்கு வெளியே கர்ப்பிணி மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்ததோடு போலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண் டதற்காக வினோத் திருநாவுக் கரசுக்கு 3,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டு களையும் அவர் ஒப்புக் கொண்டார். காயம் விளைவித்தல், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, அரசாங்க அதிகாரி களுக்கு எதிராக தகாத வார்த்தை களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அவருக்கு தண்டனை விதிக்கப்படும்போது காயம் விளை வித்தல், மிரட்டுதல் போன்ற இதர குற்றச்சாட்டுகளை அவர் எதிர் நோக்கினார். கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ரோண்டேவூ ஹோட்டலில் உள்ள கிளப் செக்மேட்டில் வினோத் தனது மனைவியையும் பால்ய நண்பர்களையும் சந்தித்தார் என்று நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன. எல்லாரும் சென்றபிறகு மறுநாள் விடியற்காலை 2.10 மணி யளவில் வினோத் மனைவியிடம் சச்சரவில் ஈடுபட்டார்.

அவரது மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் மனைவியின் தலைமுடியைப் பிடித்து அவர் இழுத்தார். அப்போது வழிப்போக்கர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தினார். இதற்கிடையே 2.20 மணியளவில் போலிசார் அங்கு வந்தபோது வினோத் சத்தமாகக் கத்தி கைகளை மூர்க்கத்துடன் அசைத்துக் கொண்டிருந்தார். போலிஸ் அதிகாரி ஒருவர் அமைதிப்படுத்த முயற்சி செய்தபோது அவர் தகாத வார்த்தைகளால் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!