சிங்டெல் செயலி செயலிழந்தது

மென்பொருள் குறைபாடு காரண மாக சிங்டெல் நிறுவனத்தின் கைபேசி செயலி செயலிழந்தது. நேற்றுக் காலை அந்நிறுவனத் தின் பல வாடிக்கையாளர்கள் செயலியைப் பயன்படுத்த முடிய வில்லை. அதே சமயத்தில் மற்ற வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்களையும் அது காட்டிய தாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுந்தது.

திங்கட்கிழமை இரவே வாடிக் கையாளர்கள் 'மைசிங்டெல்' செயலியில் தங்களுடைய கணக்கில் நுழையாமல் மற்ற வரின் கணக்கில் நுழைந்து பல விவரங்களைப் பார்க்க முடிந்தது என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை நேற்றுக் காலையும் தொடர்ந்தது. இதற்கிடையே மென்பொருள் கோளாறு காரணமாக தவறான விவரங்கள் வெளியானதால் செயலி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சிங்டெல் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!