ஆடைக் கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாட்டின் கோவில்களில் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த இந்து அறநிலையத் துறை பிறப்பித்த உத் தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று இடைக்காலத் தடை விதித்தது. கோவிலுக்கு வருவோர் பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது நடைமுறையில் இல்லை என்றும் கோவில்களுக்கு வரும் ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் காற்சட்டை, அரைக்கால் சட்டை, டி=சட்டை லெக் கின்ஸ், ஆகியவற்றை அணிந்து வரு கிறார்கள் என்றும் குறைகூறப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த நவம்பரில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் தமது கிராம கோவில் திரு விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி எஸ். வைத் தியநாதன், "கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால் கோவி லுக்கு வரும் ஆண்கள் வேட்டி, மேல் துண்டு போன்ற ஆடைகளையும் பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் போன்ற உடலை மறைக்கும் ஆடை களையும் அணியவேண்டும்," என்று நவம்பர் 26ஆம் தேதி உத்தரவிட்டார். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!