பிரதமர் நஜிப்: மகாதீர் விலகியதால் அம்னோவுக்கு பாதிப்பில்லை

ஜெடா: முன்னைய கட்சித் தலைவர் மகாதீர் முகம்மது விலகியதால் அம்னோவுக்கு பாதிப்பில்லை என்று தற்போதைய அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். "அம்னோவை வலுப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் ஈடு பட்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராவோம்," என்றார் அவர். "வழக்கமாக, முதல் முதலாக பதவி விலகும்போதுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அம் னோவில் தற்போது பெரிய விளை வோ பாதிப்போ இல்லை என்று பலர் நம்புகின்றனர்," என்று ஜெடா பொருளியல் அரங்கத்தில் உரை யாற்றிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நஜிப் சொன்னார். சென்ற திங்கட்கிழமை அம்னோவிலிருந்து விலகிய டாக்டர் மகாதீரின் முடிவு குறித்து மலேசிய தலைவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

"அம்னோ உறுப்பினர்களை ஒன்றிணைப்பதே தற்போதைய இலக்கு. "அம்னோ வரலாற்றில் 160,000க்கும் மேற்பட்ட பேராளர் களிடையே வெளிப்படையாக ஜன நாயக முறையில் நான் தேர்ந் தெடுக்கப்பட்டேன் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தலைவர் பதவிக்கு குறைந்தது 56 நியமனங்கள் தேவைப்படும் பழைய அரசியல் முறைப்படி நான் நியமிக்கப்பட வில்லை," என்றார் திரு நஜிப். இதற்கிடையே ஜோகூர் முதல் வர் முஹமட் காலித் நோர்டின், அம்னோவிலிருந்து டாக்டர் மகா தீர் பதவி விலகியதால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடப் போவதில்லை என்றார். "மகாதீரின் முடிவு அம்னோ வுக்கு துரதிஷ்டவசமானது," என்று திரு முஹமட் காலித் நோர்டின் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!