பட்ஜெட் தேர்வில்  மோடி தேர்ச்சி

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் 2016=2017ஆம் ஆண்டுக்கான தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தை சென்ற மாதம் 29ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த அந்தத் திட்டம் பாஜக அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 1.25 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு என்பதாலும் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் என்ப தாலும் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் உலக அளவில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிற-து.
வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பு ரூ.19.78 லட்சம் கோடி. அதாவது 300 பில்லியன் டாலர். புதிய திட்டத்தில் கல்வி, சுகாதாரம், சாலைகள் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்காப்புக்கு 0.96% அதிகமாக ரூ. 2.49 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 120 மில்லியன் விவசாயிகள் வாழ்கின்ற, 58% கிராமப்புற குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற, ஒரு விவசாயக் குடும்பம் சராசரியாக 47,000 ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கின்ற, பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் மாதம் சராசரியாக 6,400 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டுகின்ற ஒரு நாட்டில், இத்தகைய ஏழைகளை அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை என்று குறை கிளம்பி வலம்வந்த நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வகையில் புதிய திட்டம் விவசாயிகளை, கிராமப் புற மக்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அனைவருக்கும் வரும் 2018ஆம் ஆண்டுக்குள் மின்சாரம்; வறுமைக் கோட்டின் கீழுள்ள முதியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு திட்டங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமூக நலன், ஊரக வளர்ச்சி, அடித்தள வசதிகளில் முதலீடு, சுகாதாரக் காப்பீடு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு என்று அனைத்திலும் கவனம் செலுத்துவது; நிதிப் பற்றாக்குறையை வரம்புக்குள் வைப்பது, நிதிச் சீர்திருத்தம், தொழில் தொடங்க எளிமையான வழிமுறைகள், வரிச் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது எல்லாம் இந்தத் திட்டத்தில் இடம் பெற்று இருக்கின்றன.
புதிய வரவுசெலவுத் திட்டத்தில் புதிய வரிவிதிப்புகள் இல்லை. அதேவேளையில் தங்களுக்கு வரிச் சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்ட மாத வருவாய்க்காரர்களுக்கும் வரி செலுத்தும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் திட்டத்தில் எந்த ஊக்குவிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5% இருக்கும் என்று திட்டம் சொல்கிறது. மொத்தத்தில் இந்திய அரசு இப்போது தாக்கல் செய்துள்ள வரவுசெலவு திட்டம் பெரிய அளவில் பிரச்சினைகளை, விவாதிப்புகளைக் கிளப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், 1947ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ஆர். கே. சண்முகம் செட்டியார், மொத்த வருவாய் ரூ.171.15 கோடி என்றும் செலவு ரூ.197.39 கோடி என்றும் அறிவித்து தாக்கல் செய்த நாட்டின் முதல் வரவுசெலவுத் திட்டம் முதல், 1991ல் இறக்குமதி, ஏற்றுமதிக் கொள்கையை மாற்றி, இறக்குமதிக்கு உரிமம் பெறும் முறையை ரத்து செய்து, ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தீவிரம் காட்டி மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம் வரை இந்திய நாட்டில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்த பத்து வரவுசெலவுத் திட்டங்களில் ஒன்றாக இப்போதைய புதிய திட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதற்கு முதல் நாள், மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, புதிய வரவு செலவுத் திட்டம் என்பது தான் எழுதப் போகும் தேர்வு என்று குறிப்பிட்டு இருந்தார்.
திட்டத்தைப் பார்க்கையில், இந்தியாவின் பல்வேறு தரப்புகளும் கூறிவருவதைப் போல, மோடி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. பல தரப்புகளாலும் பெரிதும் பாராட்டப்பட வில்லை என்றாலும் பெரும் குறை காண முடியாத அளவுக்கு புதிய திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருந்தாலும் திட்டம் எவ்வாறு அமலாக்கப்படுகிறது? ஏற்படக்கூடிய பலாபலன்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கும்? என்பதைப் பொறுத்தே புதிய திட்டத்தின் வெற்றி இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!