5வது முறையாக விருது வென்ற மெஸ்சி

ஸுரிக்: அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருது (Ballon d'Or) விருதை பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி வென்றுள்ளார். இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்று மெஸ்சி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த விருதை வென்றிருந்தார் மெஸ்சி. கடந்த ஆண்டு இந்த விருதை ரியால் மட்ரிட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றிருந்தார்.

ரொனால்டோவிடமிருந்த விருதை மெஸ்சி தட்டிப் பறித்துள்ளார். ரொனால்டோவுக்கு இம்முறை இரண்டாவது இடமே கிட்டியது. பார்சிலோனாவின் நெய்மார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

"இந்த விருதை மீண்டும் வென்றிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த விருதை இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வென்றுள்ளேன். இதை ஐந்தாவது முறை வென் றுள்ளேன் என்று நினைக்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. இந்த விருது எனக்குக் கிடைக்கும் என்று சிறுவனாக இருந்த போதுகூட நான் கனவு கண்ட தில்லை," என்று விருதைப் பெற்ற பெருமிதத்துடன் கூறினார் மெஸ்சி.2016-01-13 06:00:00 +0800

மகளிருக்கான பிரிவில் உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீராங்கனை விருதை வென்ற அமெரிக்காவின் ஹியூஸ்டன் டேஷ் கார்லி லோய்ட்டுடன் ரொனால்டோவைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது முறையாக உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருது வென்ற லயனல் மெஸ்சி. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!