நாளை முதல் விருந்து படைக்க வருகிறது ‘அவியல்’

'பீட்சா', 'ஜிகர்தண்டா' படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ், தரமான குறும்படங்களை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழ்த் திரைப் பட வரலாற்றில் புதுமை படைக்கும் வகையில் இந்நிறுவனம், கார்த்திக் சுப்புராஜ், ஐந்து புதிய இயக்குநர் களின் கதைகளை, 'பெஞ்ச் டாக் கீஸ்' எனும் தலைப்பில் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்க ளில் வெளியிட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இம்முறை, 'பெஞ்ச் டாக்கீஸ்' இரண்டாம் பாகம் 'அவியல்' எனும் தலைப்பில் வெளியாகிறது.

மக்களின் ரசனையைக் கவரும் விதத்தில் படைக்கப்பட்ட ஐந்து நகைச்சுவையான, ஜனரஞ் சகமான கதைகளின் கலவையே 'அவியல்' என கார்த்திக் தரப்பு தெரிவிக்கிறது. ஷம்மீர் சுல்தான், மோகித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன், அல்போன்ஸ் புத்திரன் ஆகியோரின் ஐந்து கதைகளே இம்முறை குறும்படத் தொகுப்பாக இடம்பெறுகிறது.

பல வெற்றி படங்களை வெளி யிட்ட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், 'அவியல்' தொகுப்பையும் தமிழகம் முழுவதும் நாளை வெளியிடுகிறது. 'அவியல்' திரைப்படத்தில், இளம் முன்னணி கதாநாயகர்கள் பாபி சிம்ஹா, நிவின் பாலி, இளம் நட்சத்திரங்கள் தீபக் பரமேஷ், அர்ஜூன், ஷரத் குமார், புதுமுகங் கள் அம்ருதா சீனிவாசன், ரோகித் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் (ஜில் ஜங் ஐக்), ராஜேஷ் முருகேசன் (ப்ரேமம், நேரம்), ஜாவேத் ரியாஸ், ஷமீர் சுல்தான் ஆகியோர் இசையமைத் துள்ளனர். கேரளா, அமெரிக்காவிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது 'அவியல்'.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!