பிரதமராக எப்போது பதவியேற்பது என்பது குறித்து இன்னும் முடிவில்லை: துணைப் பிரதமர்

பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து எப்போது பிரதமர் பதவியை ஏற்பார் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். ஆனால், பதவியேற்பு காலப் போக்கில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

2025க்குள் நடத்தப்படவேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ பிரதமராக பதவியேற்பு நடைபெறலாம் என்று நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார். 

“தெரிவுகள் உள்ளன. நாம் அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் பதவியேற்பு கண்டிப்பாக நிகழும். அது காலப் போக்கில் இடம்பெறும்”, என்று அவர் தெரிவித்தார். 

பிரதமராக பதவியேற்பது பற்றி கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு வோங் பேசியிருந்தார்.   

நிக்கேயின் அனைத்துலகச் செய்தித் துறை தலைவர் ஷிகெசபுரொ ஒக்குமுரா வியாழக்கிழமை (மே 25) கேட்ட கேள்விக்கு திரு வோங் இவ்வாறு பதிலளித்தார். 

நிக்கேய் நடத்திய 28ஆவது ‘ஆசியாவின் எதிர்காலம்’ எனும் கருத்தரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில் நெறியாளராக இருந்தார், திரு ஒக்குமுரா. அந்தக் கருத்தரங்கில் வர்த்தகத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

பிரதமர் பதவியேற்புக்கான காலகட்டம், ஊடகங்களின் ‘விருப்பமான கேள்வி’ எனக் கூறிய திரு வோங், தாம் பொருளியல் தொடர்பான உள்நாட்டு விவகாரங்கள், சமூகக் கொள்கைகளின் மறுஆய்வு ஆகியவற்றில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிகழ்வுகளிலும் தாம் அதிகமாகக் கலந்துகொண்டு வருவதாக அவர் கூறினார். மே மாதம் அவர் ஜப்பானுக்குச் சென்றிருப்பது இது இரண்டாம் முறை என்று திரு வோங் குறிப்பிட்டார். முன்னதாக, நிகாட்டாவில் நடைபெற்ற ஜி7 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!